MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Simbu Net Worth : கோலிவுட் ‘அரசன்’ சிம்பு இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?

Simbu Net Worth : கோலிவுட் ‘அரசன்’ சிம்பு இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் சிம்பு, இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 03 2026, 10:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Actor Simbu Birthday
Image Credit : X

Actor Simbu Birthday

சிறுவயதிலேயே திரையுலகில் அடியெடுத்து வைத்த சிம்பு, காலப்போக்கில் நடிகர் என்ற அடையாளத்தைத் தாண்டி பாடலாசிரியர், பின்னணி பாடகர், இயக்குநர், நடனக் கலைஞர் என பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தினார். கோலிவுட்டில் கமல் ஹாசன் உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களுக்குப் பிறகு, அதிகமான கலைத்திறன்களை கொண்ட நடிகர்களில் சிம்புவும் ஒருவர் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

தன்னைச் சுற்றி எழும் விமர்சனங்கள், சர்ச்சைகள் என எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி அசால்ட்டாக நகரும் அவரது அணுகுமுறை பலருக்கும் ஆச்சரியமளிப்பதாகவே இருந்து வருகிறது.

25
சிம்புவின் கம்பேக்
Image Credit : Instagram

சிம்புவின் கம்பேக்

இப்படியான நிலையில், அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட தொடர் காதல் தோல்விகள் ஒரு கட்டத்தில் அவரை ஆன்மீக பாதையை நோக்கி அழைத்துச் சென்றன. இமயமலை பயணம் உள்ளிட்ட ஆன்மீக தேடல்களால், சிம்பு இனி சினிமாவில் முன்னணி இடத்தை பிடிக்க முடியாது; அவரின் இடத்தை வேறு நடிகர்கள் கைப்பற்றிவிடுவார்கள் என்றெல்லாம் பேச்சு அடிபட்டு வந்தது.

ஆனால், “அந்த சீனே இங்க இல்லை” என்பதை நிரூபிப்பதுபோல், ‘மாநாடு’ படத்தின் மூலம் சிம்பு தரமான கம்பேக் கொடுத்தார். 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை பெற்ற அந்த படம், அவரது மார்க்கெட் இன்னும் உறுதியானதாக இருப்பதை வெளிப்படுத்தியது. தொடர்ந்து வெளியான ‘பத்து தல’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘தக் லைஃப்’ ஆகிய படங்களில், ‘வெந்து தணிந்தது காடு’ மெகா ஹிட் அடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘தக் லைஃப்’ படம் வசூலில் தோல்வியடைந்தாலும், அதில் சிம்புவின் நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

Related Articles

Related image1
Simbu: மாஸ் ஹீரோவாக சிம்பு ரீ-என்ட்ரி! அரசனுக்கு பிறகு வரும் அதிரடி படம் இதுதான்.!
Related image2
தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!
35
அரசன் சிம்பு
Image Credit : X

அரசன் சிம்பு

தற்போது வெற்றிமாறன், அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி போன்ற முக்கிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள சிம்பு, ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். ‘அரசன்’ படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி கோலிவுட்டில் தொடர் வெற்றி படங்களை கொடுத்ததுபோல், அதே மாதிரியான ஒரு வெற்றிப் பயணத்துக்கு ‘அரசன்’ முதல் அடியாக அமையும் என்ற நம்பிக்கையில் STR ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படியான சூழலில், இன்று சிம்பு தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

45
சிம்பு சொத்து மதிப்பு
Image Credit : Twitter

சிம்பு சொத்து மதிப்பு

இதனிடையே, சிம்புவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்களும் கவனம் பெற்றுள்ளன. அதன்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 100 முதல் 120 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது. சென்னையில் பல கோடி மதிப்புள்ள அவரது பங்களாவில் நவீன வசதிகளுடன் கூடிய ரெக்கார்டிங் ஸ்டூடியோ அமைந்துள்ளதாகவும், அதிலேயே அவர் தனது பாடல் பணிகளை மேற்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது.

55
துபாயில் வீடு வாங்கிய சிம்பு
Image Credit : Facebook

துபாயில் வீடு வாங்கிய சிம்பு

மேலும், ஒரு படத்துக்கு சுமார் 20 முதல் 30 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சிம்புவிடம் வேல் ஃபயர், மினி கூப்பர் உள்பட பல உயர்தர சொகுசு கார்கள் இருப்பதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு பல கோடிகளைத் தாண்டும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் துபாயில் புது வில்லா ஒன்றையும் சிம்பு வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அங்கு அஜித்தின் வீடு அமைந்துள்ள பகுதியில் அவர் வில்லா வாங்கி இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிலம்பரசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாண்டியனை வம்பில் மாட்டிவிட்ட வானதி... நள்ளிரவில் காத்திருந்த சம்பவம் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image2
அசிங்கப்பட்ட முத்து... ரவியிடம் கையும் களவுமாக சிக்கிய ஸ்ருதியின் அப்பா - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image3
மீண்டும் இணைந்த ரெளடி பேபி காம்போ... தனுஷ் உடன் ஜோடி சேர்ந்த சாய் பல்லவி..!
Related Stories
Recommended image1
Simbu: மாஸ் ஹீரோவாக சிம்பு ரீ-என்ட்ரி! அரசனுக்கு பிறகு வரும் அதிரடி படம் இதுதான்.!
Recommended image2
தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved