MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அரசன்: சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்த இரு துருவங்கள்! விக்ராந்த் மற்றும் கமலேஷ் ஜெகனின் மாஸ் என்ட்ரி!

அரசன்: சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்த இரு துருவங்கள்! விக்ராந்த் மற்றும் கமலேஷ் ஜெகனின் மாஸ் என்ட்ரி!

Arasan Movie STR and Vetri Maaran Update : இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'அரசன்' படத்தில் நடிகர்கள் விக்ராந்த் மற்றும் கமலேஷ் ஜெகன் இணைந்துள்ளனர். இதைப் பற்றி மேலும் விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 11 2026, 07:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Arasan Movie STR and Vetri Maaran Update
Image Credit : X

Arasan Movie STR and Vetri Maaran Update

சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் படம் தான் அரசன். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் இப்போது விக்ராந்த் மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி பட புகழ் கமலேஷ் ஜெகன் ஆகியோர் இணைந்துள்ளனர். விடுதலை மற்றும் விடுதலை 2 போன்ற பிரமாண்ட படங்களுக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் தான் அரசன். இந்தப் படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: Simbu Net Worth : கோலிவுட் ‘அரசன்’ சிம்பு இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?

25
அரசன் படம் சிம்பு வெற்றிமாறன் அப்டேட்
Image Credit : X

அரசன் படம் சிம்பு வெற்றிமாறன் அப்டேட்

சிம்புவின் 49ஆவது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் சிம்புவுடன் இணைந்து சமுத்திரக்கனி, கிஷோர் குமார் ஜி, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சிம்பு, வெற்றிமாறன் மற்றும் அனிருத் கூட்டணியில் உருவாகும் முதல் படம் என்பதால் இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read This : Rashmika Mandanna: விமர்சனங்களை படிக்கல்லாக மாற்றிய ராஷ்மிகா! தன்னை காயப்படுத்தியவர்களுக்கு மௌனத்தால் பதிலடி கொடுத்தது எப்படி?

35
வடசென்னை பாணி:
Image Credit : stockPhoto

வடசென்னை பாணி:

அரசன் வடசென்னை பாணியில் ஒரு பகுதியாக இருந்ததாக வெற்றி மாறன் தெரிவித்ததிலிருந்து, சிலம்பரசன் நடிக்கும் படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. அப்போ வட சென்னை பிரபஞ்சத்திலிருந்து, ஆண்ட்ரியா ஜெராமியா மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் சந்திரா மற்றும் குணா வேடங்களில் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட சென்னையில் இருந்து உருவாக்கப்பட்ட இந்த கதையை இதை "உலகிலிருந்து சொல்லப்படாத கதை" என்று விவரிக்கிறார்கள். அரசன் படத்தில் சிம்பு இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதுவும், யூத்தாகவும், வயதான தோற்றத்திலும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

45
Vikranth joins Arasan Movie cast, அரசன் படத்தில் இணையும் விக்ராந்த்,
Image Credit : X

Vikranth joins Arasan Movie cast, அரசன் படத்தில் இணையும் விக்ராந்த்,

படத்தின் முதல் படப்பிடிப்பு கோவில்பட்டி மற்றும் மற்றும் மதுரையைச் சுற்றி படமாக்கப்பட்டதாம். அதன்பிறகு இரண்டாவது படப்பிடிப்பு சென்னையில் எடுக்கப் போவதாக சொல்லப்படுகிறது. கோவில்பட்டி மற்றும் மதுரையை சுற்றி சிலம்பரசன ஒரு கிராமத்து கதையை கொண்டு வருவதாகவும், இதில் சிம்பு இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக சொல்லப்பட்ட வந்த நிலையில் பிளாஷ்பேக்கில் தனது அப்பா ஒரு கிராமத்தில் வாழ்ந்தார் என்பதை கோவில்பட்டி மற்றும் மதுரையை சுற்றி எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இரண்டாவது படப்பிடிப்பு சென்னையில் படமாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அதாவது ஒரு சிட்டியை பின்னணியில் வைத்து வருவதாகவும் தெளிவுபடுத்துகிறது.

55
Kamalesh Jagan in Simbu Arasan Movie, சிம்புவின் அரசன் படத்தில் கமலேஷ் ஜெகன்
Image Credit : Google

Kamalesh Jagan in Simbu Arasan Movie, சிம்புவின் அரசன் படத்தில் கமலேஷ் ஜெகன்

படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், நடிகர் விக்ராந்த் மற்றும் Tourist Family புகழ் குழந்தை நட்சத்திரம் கமலேஷ் ஜெகன் ஆகியோர் படத்தின் நடிகர்களுடன் இணைந்துள்ளதாக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

விக்ராந்தின் முக்கியத்துவம்: 'அரசன்' படத்தில் விக்ராந்த் ஒரு பவர்ஃபுல்லான நெகட்டிவ் ரோல் அல்லது முக்கியத் துணை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

கமலேஷ் ஜெகனின் வருகை: தனது யதார்த்தமான நடிப்பால் கவனம் ஈர்த்த கமலேஷ் ஜெகன், வெற்றிமாறனின் உலகத்திற்குள் (Vetri Maaran Universe) நுழைவது படத்தின் நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது.

கதைக்களம்: 'அரசன்' திரைப்படம் முழுக்க முழுக்க வடசென்னை அல்லது நிலம் சார்ந்த அரசியலைப் பேசும் ஒரு ஆக்ஷன் டிராமா படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
எஸ்.டி.ஆர் 49 திரைப்படம்
சிலம்பரசன்
சிலம்பரசன்
வெற்றிமாறன்
தமிழ் சினிமா
திரைப்படம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rashmika Mandanna: விமர்சனங்களை படிக்கல்லாக மாற்றிய ராஷ்மிகா! தன்னை காயப்படுத்தியவர்களுக்கு மௌனத்தால் பதிலடி கொடுத்தது எப்படி?
Recommended image2
4 ஆண்டுகளில் விவாகரத்து.! கணவரை பிரிந்தார் ஹன்சிகா மோத்வானி.! இதுதான் காரணமா?
Recommended image3
அனிருத்-க்கே டஃப் கொடுப்பார் போலயே! குறுகிய காலத்தில் கோடீஸ்வரரான சாய் அபயங்கர்! ஒரு பாடலுக்கு இத்தனை கோடியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved