சிம்புவுக்கு லவ் மேரேஜ்... ரஜினி தான் அவரின் மாமனார் - கொளுத்திபோட்ட பிரபல நடிகை
வெந்து தணிந்தது காடு படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை சித்தி இத்னானி, சுவாரஸ்யமான கற்பனைக் கதை ஒன்றை கூறி உள்ளார்.
நடிகர் சிம்பு என்றாலே வம்பு என்று சொல்லும் அளவுக்கு அவர் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு உடல் எடையை குறைத்த பின்னர் ஆளே மாறிவிட்டார். அதன்பின்னர் அவரைப்பற்றி புகார்கள் எதுவும் எழவில்லை. அதுமட்டுமின்றி நடிப்பிலும் படு பிசியாகிவிட்டார். கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
இதையடுத்து இவர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு. கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியாகும் முதல் தமிழ்படம் இதுவாகும். இப்படத்தில் மும்பையில் வேலையில் செய்யும் தமிழ் பெண்ணாக நடித்துள்ளார் சித்தி இத்னானி.
இதையும் படியுங்கள்... தளபதி 67 வேற லெவல் அப்டேட்... பாலிவுட் நடிகரை வில்லனாக்கும் லோகேஷ்..! சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?
வெந்து தணிந்தது காடு படத்தின் புரமோஷனுக்காக இவர் பல்வேறு பேட்டிகளை கொடுத்துள்ளார். அதன்படி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கற்பனைக் கதை எதாவது கூறும்படி நடிகை சித்தி இத்னானியிடம் தொகுப்பாளர் கேட்டுள்ளார். இதற்கு அவர் சிம்புவுடனான காதல் பற்றி சுவாரஸ்யமான கதை ஒன்றை கூறி ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.
அவர் கூறியதாவது: “எனது கற்பனை கதையில் சிம்புவும் நானும் பள்ளிப்பருவ காதலர்கள். எனது தந்தையாக ரஜினிகாந்த் இருக்கவேண்டும், சிம்புவின் அண்ணனாக உதயநிதி இருக்க வேண்டும். இறுதியில் ரஜினியும், உதயநிதி ஸ்டாலினும் சேர்ந்து எங்கள் இருவருக்கும் கல்யாணம் பண்ணி வைத்தால் நன்றாக இருக்கும் என கலகலப்பாக தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ஒன்னில்ல... ரெண்டில்ல... மொத்தம் 50 முறை! விக்ரம் படத்தை ரிப்பீட் மோடில் பார்த்து சாதனை படைத்த கமல் ரசிகர்