ஒன்னில்ல... ரெண்டில்ல... மொத்தம் 50 முறை! விக்ரம் படத்தை ரிப்பீட் மோடில் பார்த்து சாதனை படைத்த கமல் ரசிகர்

நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகன் ஒருவர் விக்ரம் திரைப்படம் 50 முறைக்கு மேல் பார்த்து உலக சாதனை படைத்து லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்று உள்ளார்.

Kamalhaasan diehard fan udhaya bharathi watched vikram movie more than 50 times and creates world record

தமிழ் சினிமாவில் பல்வேறு சாதனைகளைப் படைத்த உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் கமல்ஹாசன். அவரது சாதனைப் பயணத்தில் மேலும் ஒரு மகுடமாய் அமைந்த படம் தான் விக்ரம். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். கமலின் தீவிர ரசிகனான இவர், இப்படத்தின் மூலம் தனது குருவுக்கு பிரம்மாண்ட வெற்றியை பெற்றுத் தந்துள்ளார்.

தமிழ் நாட்டில் ரிலீசான தமிழ் படங்களில் அதிக வசூல் ஈட்டிய படம், அதிகம் பேர் பார்த்த திரைப்படம், இந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படம், வினியோகஸ்தர்களின் அதிக அளவு லாபத்தை தந்த படம் என விக்ரம் படம் படைத்த சாதனைகள் ஏராளம். அண்மையில் கூட வெற்றிகரமாக 100 நாட்களை கடந்து சாதனை படைத்தது இப்படம்.

இதையும் படியுங்கள்... மன அழுத்தத்தை போக்கும் மாமருந்து ‘வடிவேலு’... வைகைப்புயலின் பிறந்தநாளுக்கு கடல்போல் குவியும் வாழ்த்து

இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இப்படத்தை ரசிகர்கள் திரும்ப திரும்ப வந்து பார்த்தது தான் என கூறப்பட்டது. அப்படி இப்படத்தை 50 முறைக்கு மேல் பார்த்து கமலின் தீவிர ரசிகர் ஒருவர் உலக சாதனையே படைத்துள்ளார். அவரின்  சாதனையை அங்கீகரிக்கும் விதமாக லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் அவரது பெயர் இடம்பெற்று உள்ளது.

கமலின் தீவிர ரசிகனான உதயபாரதி தான் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார். தனது சாதனையை அங்கீகரித்த லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸுக்கு அதில் நன்றி தெரிவித்துள்ள அவர், தனக்கு மனநிம்மதி தரும் ஒரே ஒரு நபர் உலகநாயகன் கமல்ஹாசன் தான் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... மணிரத்னம் அழைத்தும் பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்த அமலா பால்... என்ன காரணம் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios