துணிவு - வாரிசு இடையே நடக்கும் கடும் போட்டி! 3வது நாளில் பாக்ஸ் ஆபீஸ் கிங் யார்?
விஜய் - அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான 'வாரிசு' மற்றும் 'துணிவு' திரைப்படங்களின் மூன்றாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி யார் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை நிரூபித்துள்ளது.
விஜய் - அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான 'வாரிசு' மற்றும் 'துணிவு' திரைப்படங்களின் மூன்றாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி யார் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை நிரூபித்துள்ளது.
தளபதி விஜயின் 'வாரிசு' மற்றும் அஜித்குமார் நடித்த 'துணிவு' ஆகிய இரண்டு படங்களுமே, ஜனவரி 11ஆம் தேதி ஒரே நாளில் வெளியாவதால், தமிழ் இண்டஸ்ட்ரியில் இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் மோதலை உருவாக்கியது. யார் நம்பர் 1 என்கிற போட்டி, ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
பாக்ஸ் ஆபிஸில் கடந்த இரண்டு நாட்களாகவே அஜித்தின் 'துணிவு' திரைப்படம் சற்று மேலோங்கிய உள்ள நிலையில், மூன்றாவது நாள் வசூல் குறித்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
வெளிநாடுகளில் மட்டும் இதுவரை துணிவு திரைப்படம், இதுவரை 9 கோடியில் இருந்து 10 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும், வாரிசு 8 முதல் 9 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வாரிசு திரைப்படத்தை விட துணிவு திரைப்படம் சர்வதேச அளவில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக வட அமெரிக்காவில், அஜித்தின் 'துணிவு' திரைப்படம் அதிக வசூலை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்திலும் துணிவு திரைப்படம் மூன்று நாட்களில் 43 கோடி வசூல் செய்துள்ளதாகவும், வாரிசு திரைப்படம் 40 கோடி மட்டுமே வசூல் செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
பிரபல நடிகரின் மகளை தூக்கி வைத்து கொண்டு போஸ் கொடுத்த விஜய்! வைரலாகும் போட்டோஸ்..!
இரண்டு படங்களுமே, ஒரு சில கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில், நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இனி அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் இரண்டு படங்களுமே நல்ல வசூல் கிடைக்கும் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.