புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து போதும்! அடுத்த படத்திற்காக அதிரடி முடிவெடுத்த ரஜினிகாந்த்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதுமுக இயக்குனர்களுக்கு தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கொடுத்து வரும் நிலையில், அடுத்த படத்தில் தன்னுடைய ஆஸ்த்தான இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த சில வருடங்களாகவே புதுமுக இயக்குனர்களுக்கு தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்து வருகிறார். அந்த விதத்தில் 'கபாலி' படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் 'காலா' படத்தில், இரண்டாவது முறையாக இணைந்தார்.
பின்னர் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கிய, 'பேட்ட' படத்தில் மிகவும் துரு துரு ரஜினிகாந்தை, ரசிகர்கள் கண் முன் நிறுத்தினார். அதே போல் கடைசியாக, சிறுத்தை சிவா இயக்கிய 'அண்ணாத்த' படத்தில் தங்கை செண்டிமெண்ட் காட்சியில் நடித்து ரசிகர்கள் மனதை கலங்க வைத்தார்.
தற்போது மீண்டும் இளம் இயக்குனர்களில் ஒருவரான நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து புதுமுக இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்பை அள்ளிக் கொடுத்து வரும் ரஜினிகாந்த், அடுத்தடுத்து இளம் இயக்குனர்கள் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடி தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் புதுமுக இயக்குனர்களுடன் இணைந்து நடித்த படங்கள், வெற்றி பெற்றாலும்... ரஜினிகாந்த் இதற்க்கு முன் நடித்த படையப்பா, பாட்ஷா, முத்து, சந்திரமுகி, போன்ற படங்களின் சாதனைகளின் கிட்ட கூட நெருங்க முடியவில்லை. எனவே தன்னை ராஜாவாக நடிக்க வைத்த இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீப காலமாக வரலாற்று கதையம்சத்துடன் வெளியான 'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்', 'பொன்னியின் செல்வன்' போன்ற படங்கள் இமாலய வெற்றியை கண்ட நிலையில், இதே போன்ற வரலாற்று கதையை கதையில் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை, ஏற்கனவே ரஜினிகாந்தை வைத்து சந்திரமுகி படத்தை இயக்கி பி.வாசுவுக்கு வழங்கியுள்ளாராம். 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் இந்த படம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல நடிகரின் மகளை தூக்கி வைத்து கொண்டு போஸ் கொடுத்த விஜய்! வைரலாகும் போட்டோஸ்..!