பிரபல நடிகரின் மகளை தூக்கி வைத்து கொண்டு போஸ் கொடுத்த விஜய்! வைரலாகும் போட்டோஸ்..!
தளபதி விஜய், வாரிசு படத்தின் வெற்றியை நேற்று கொண்டாடியதாக கூறப்பட்ட நிலையில், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகரின் மகளை தூக்கி வைத்துக்கொண்டு விஜய் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்த, 'வாரிசு' திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியான நிலையில், ரசிகர்கள் தற்போது வரை தளபதியையும், வாரிசு படத்தையும், கொண்டாடி வருகின்றனர். முதல் நாளை இப்படம் சுமார் 25 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த நிலையில், படத்தின் வெற்றியை உறுதி செய்த தளபதி விஜய், இயக்குனர் வம்சி, மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் நேற்றைய தினம், 'வாரிசு' படத்தின் வெற்றியை கொண்டாடியதாக கூறப்பட்டது.
இயக்குனர் வம்சி மற்றும் தயாரிப்பாளர்கள் தில் ராஜு ஆகியோர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்த போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களும், சமூக வலைதளத்தில் வைரலாகி... ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது
விஜய்யின் இளமைக்கு காரணம் இந்த புட் டயட் தானா..? நடிகர் ஷியாமுக்கு ஷாக் கொடுத்த தளபதி..!
இந்த வெற்றி விழாவில், இப்படத்தில் நடித்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் தமிழில் சில படங்களில் ஹீரோவாகவும், சில படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமான, நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தன்னுடைய மனைவி நிஷா மற்றும் மகளுடன் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது கணேஷ் வெங்கட்ராமன் மகளை தளபதி விஜய் தன் கைகள் தூக்கி வைத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு தளபதி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. எப்போதுமே தளபதி குழந்தைகள் மீது மிகவும் அன்பானவர் என்பது அனைவரும் அறிந்ததே, அதனை ஒவ்வொரு முறையும்... இது போன்ற செயல்களின் மூலம் நிரூபித்து வருகிறார் என தளபதியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.