ஓடிடியிலும் சாதனை படைத்த வலிமை..வெளியான ஸ்ட்ரீமிங் விவரம்..
ஜீ 5-ல் தற்போது ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வரும் அஜித்குமாரின் வலிமை தற்போது வரை ஒளிபரப்பாகிய மினிட்ஸ் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

valimai
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர், அஜித்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள அடுத்த படம் தான் வலிமை.
valimai
இப்படத்தில் அஜித்தின் தோழியாகவும் போலீஸ் அதிகாரியாகவும் காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். இவர்களுடன் குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
valimai
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியான இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...Valimai ott streaming records: ஓடிடியில் வெளியான ஒரே நாளில் வலிமை தந்த மவுசு...ரசிகர்கள் படு குஷி..!
valimai
கடந்த 2019 -ம் ஆண்டு முதல் படப்பிடிப்பில் இருந்த இந்த படம் கிட்டத்தட்ட 2 அரை வருட காத்திருப்புக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.
valimai
மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த வலிமை வெளியாவதற்கு முன்னரே சாதனை படைத்திருந்தது. படம் வெளியான அடுத்த மூன்றுநாட்களுக்கு பெரும்பாலான திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆகியிருந்தன.
valimai
படம் வெளியான மூன்று நாட்களில் கிட்டத்தட்ட ரூ.100 கோடியை வசூலித்து சாதனை செய்த இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
valimai
கலவையான விமர்சங்களை பெற்ற இந்த படம் உலக அளவில் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக போனி கபூர் அறிவித்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...அனிமேஷனுடன் அதிரடி காட்டும் ஆர்யா...வெளியானது கேப்டன் பர்ஸ்ட் லுக்.
valimai
இந்த படத்தின் OTT தளத்தின் உரிமத்தை Zee 5-கைப்பற்றியது. இதையடுத்து படம் வெளியாகி ஒரு மாதம் கழித்து கடந்த மார்ச் 25-ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸானது. தற்போது வலிமை 500 + ஸ்ட்ரீமிங்கை பெற்று மினிட்ஸ் கிளப்பில் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.