Ajith: நன்றி கூறி உருக்கமாக கடிதம் எழுதிய அஜித்...நெகிழ்ந்து போன இருவர்! யாருனு தெரியுமா.? இணையத்தில் வைரல்!

Ajith: எச்.வினோத் இயக்கத்தில் AK 61 படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், நடிகர் அஜித் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார். 

Ajith write letter for important person

எச். வினோத் இயக்கத்தில் AK 61 படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், நடிகர் அஜித் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார். 

Ajith write letter for important person

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் ,கடந்த மாதம் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.  கலவையான விமர்சனத்தை இந்த படம் பெற்று தந்தாலும், வசூலில் பட்டைய கிளப்பியது, உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

அடுத்த ட்ரீட் அஜித் 61:

Ajith write letter for important person

வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து, அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைகின்றனர். ‘அஜித் 61’ படபிடிப்புப் பணிகள் விரைவில் துவங்கும் என்று படக்குழுவினர் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.  இந்த படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், அதில் ஒன்றி மங்காத்தா பாணியில் வில்லன் கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. இப்படம் மணி ஹெய்ஸ்ட் வெப் தொடர் பாணியில் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து தயாராக உள்ளது.  

அஜித் - விக்னேஷ் சிவன் கூட்டணி:  

Ajith write letter for important person

அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில் அஜித் 62 படத்தின் தகவல் வெளிவந்து ரசிகர்களை குஷி ஆக்கியது. லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், உருவாகும் இந்த படத்தில்  அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.  படம் முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை மையமாக கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விக்னேஷ் சிவன் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

கேரளாவிற்கு விசிட் அடித்த அஜித்:

Ajith write letter for important person

நடிகர் அஜித் சமீபத்தில் கேரளாவில் கடந்த சில தினங்களாகவே தங்கி இருந்து ஆயுர்வேத சிகிக்சை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து, சமீபத்தில் அங்குள்ள கோவிலுக்கு பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி அணிந்து அவர் தரிசனம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரல் ஆனது. தற்போது, ஆயுர்வேத சிகிக்சை முடிந்துள்ள நிலையில், நடிகர் அஜித் தனது நன்றியை தெரிவிக்கும் விதமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Ajith write letter for important person

அஜித் கைப்பட எழுதிய நன்றி கடிதம்:

இந்நிலையில்,  தனக்கு கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உன்னி கிருஷ்ணன்,கிருஷ்ணதாஸ் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் அஜித் தனது கைப்பட எழுதியுள்ள கடிதம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது

மேலும் படிக்க ....Thalaivar 169 : ரஜினியுடன் ஹீரோயினாக ஜோடி சேர்வது ஐஸ்வர்யாவா..? தீபிகாவா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

 


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios