Thalaivar 169 : ரஜினியுடன் ஹீரோயினாக ஜோடி சேர்வது ஐஸ்வர்யாவா..? தீபிகாவா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
Thalaivar 169: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 169 திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 169 திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய் மற்றும் தீபிகாவா படுகோன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்கிறார். தமிழ் சினிமாவில், சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
இவர் கடைசியாக சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளத்தையே களம் இறக்கினார் சிவா. இருப்பினும், இந்த படம் கலவையான விமர்சங்களை பெற்று, எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.
ரஜினி -நெல்சன் கூட்டணி:
இதையடுத்து, ரஜினியின் 168-வது படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இருப்பினும், அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு, படங்களில் கதைகளை தேர்வு செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்த ரஜினி, நெல்சன் (Nelson) கூட்டணியில் புதிய படத்திற்கு தயாராகி வருகிறார். நெல்சன் (Nelson) தற்போது, விஜய்யின் பீஸ்ட் (Beast) படத்தை இயக்கி முடித்து வெளியீட்டிற்கு தயாராகியுள்ள நிலையில், அடுத்த படத்தில் ரஜினியின் கூட்டணியில் அமைவதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறாராம்.
169 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
அண்மையில் தலைவர் 169 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்திற்கு இயக்குனர் நெல்சன் பாஸ் என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரஜினிக்கு ஜோடியாகும் நடிகை யார்..?
இந்நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள தலைவர் 169 படத்தில் பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது, ரஜினிக்கு ஜோடியாக நடிக்க, ஐஸ்வர்யா ராய் மற்றும் தீபிகாவா படுகோன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.