Asianet News TamilAsianet News Tamil

Valimai ott streaming records: ஓடிடியில் வெளியான ஒரே நாளில் வலிமை தந்த மவுசு...ரசிகர்கள் படு குஷி..!

Valimai ott streaming records: அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், உருவான அஜித்தின் வலிமை படம் ஒரு மாதம் கழித்து ஜீ5 தளத்தில் மார்ச் 25ம் தேதி வெளியானது.

Valimai ott first day zee 5 streaming records
Author
Chennai, First Published Mar 27, 2022, 9:56 AM IST

அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், உருவான அஜித்தின் வலிமை படம் ஒரு மாதம் கழித்து ஜீ5 தளத்தில் மார்ச் 25ம் தேதி வெளியானது.

போனி கபூர் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட இன்னும் பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். 

Valimai ott first day zee 5 streaming records

வலிமை மவுசு:

2019ம் ஆண்டு விஸ்வாசம் திரைப்படத்திற்கு பிறகு திரையரங்கில் வெளியாகி உள்ள படம் வலிமை என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. பைக் ரேஸ் காட்சிகள், சண்டைகாட்சிகள் சென்டிமெண்ட் காட்சிகள் இருக்கும் வலிமைக்கு கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் அஜித்தின் ரசிகர்களோ படத்தை கொண்டாடி வருகின்றனர். தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர்.  

வசூல் சாதனை:

Valimai ott first day zee 5 streaming records

ரசிகர்களின் பேராதரவை தொடர்ந்து வலிமை திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்திருந்தது. உலக அளவில் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக போனி கபூர் அண்மையில் அறிவித்திருந்தார். 

ஓடிடி ரிலீஸ்:

கடந்த மாதம் 24ஆம் தேதி ரீலிஸ் செய்யப்பட்ட, 25 நாட்கள் கழித்து வலிமை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் OTT தளத்தின் உரிமத்தை Zee 5-கைப்பற்றி, அதன் வெளியீட்டு தேதியையும் அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த மார்ச் 25-ந் தேதி இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸானது.

Valimai ott first day zee 5 streaming records

முதல் நாள் ரெஸ்பான்ஸ்:

இந்நிலையில் தற்போது Zee 5 தளத்தில் வெளியான முதல் நாளிலேயே வலிமை 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்கள் (streaming minutes) ஐ கடந்து சாதனை படைத்திருக்கிறது. முன்னதாக, OTT தளத்தில் வெளியான மற்ற படங்களின் சாதனையை வலிமை முறியடித்துள்ளதாக ஜீ5 தனது ட்விட்டரில் அறிவித்து உள்ளனர்.

 மேலும் படிக்க...Ram Charan's birthday: ஆர்.ஆர்.ஆர் வெற்றியை தொடர்ந்து... அடுத்த கொண்டாட்டத்தில் இறங்கிய ராம் சரண்...


 

Follow Us:
Download App:
  • android
  • ios