2 முறை பிரேக்-அப் ஆனாலும்... காதல் மீதுள்ள நம்பிக்கையை கைவிடாமல் வெற்றிகண்ட நயன்தாராவின் லவ் ஸ்டோரி ஒரு பார்வை
சினிமாவில் தற்போது எந்த அளவுக்கு பாப்புலராக இருக்கிறாரோ அந்த அளவுக்கு காதல் சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.
கேரளாவை சேர்ந்த நடிகை நயன்தாரா, முதலில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். பின்னர் சினிமாவின் மீதுள்ள அதீத ஆசையால் நடிக்க வந்த நயனுக்கு கைகொடுத்தது தமிழ் படங்கள் தான். 2005-ம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கிய ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கோலிவுட்டில் எண்டி கொடுத்தார் நயன்தாரா. இதையடுத்து ரஜினியுடன் சந்திரமுகி, விஜய்யுடன் சிவகாசி, சூர்யாவின் கஜினி என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே பேமஸ் ஆனார் நயன்.
சினிமாவில் தற்போது எந்த அளவுக்கு பாப்புலராக இருக்கிறாரோ அந்த அளவுக்கு சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார் நயன்தாரா. அதன்படி நயன்தாரா முதன்முதலில் சிக்கியது காதல் சர்ச்சையில் தான். நடிகர் சிம்புவும், நயன்தாராவும் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் பட விழாக்களில் ஜோடியாக கலந்துகொண்டு தங்களது காதலையும் உறுதிப்படுத்தினர். பின்னர் ஓரிரு ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அந்த காதல் தோல்வியில் முடிந்தது.
காதல் தோல்விக்கு பின் சிம்புவும், நயன்தாராவும் படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காதல் தோல்விக்கு பின் மீண்டும் நண்பர்களான சிம்புவும், நயன்தாராவும் பாண்டிராஜ் இயக்கிய இது நம்ம ஆளு என்கிற திரைப்படத்தில் ஜோடியாகவும் நடித்திருந்தனர்.
இதையும் படியுங்கள்... கோலிவுட்டில் திருமணமே செய்யாமல் டேட்டிங் செய்யும் காதல் ஜோடிகள் இத்தனை பேரா? என்ன லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது!
சிம்பு உடனான காதல் தோல்விக்கு பின்னர் இயக்குனர் பிரபுதேவா மீது காதல் வயப்பட்டார் நயன்தாரா. பிரபுதேவாவுக்கு திருமணமாகி குழந்தைகள் இருந்த நிலையில், அவர் நயன்தாராவை காதலித்தது மிகவும் பேசுபொருள் ஆனது. இந்த விஷயம் அறிந்த பிரபுதேவாவின் மனைவி, நயன்தாராவை பார்த்தால் செருப்பால் அடிப்பேன் என பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இருவரும் பட விழாக்களில் ஜோடியாக கலந்துகொண்டதோடு, இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இதற்காக பிரபுதேவாவின் பெயரை தனது கையில் பச்சைக்குத்திக் கொண்ட நயன்தாரா, சினிமாவில் இருந்து விலகவும் முடிவு செய்தார். சீதா ராமராஜ்ஜியம் என்கிற தெலுங்கு படம் தான் தனது கடைசி படம் எனக் கூறி அப்படத்தின் ஷூட்டிங் முடியும் போது நயன்தாரா கண்ணீர்மல்க விடைபெற்ற வீடியோவும் வெளியானது. ஆனால் இந்த காதலும் நயன்தாராவுக்கு கைகூடாமல் போனது. திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரபுதேவாவை பிரிந்ததோடு, அவர் நியாபகார்த்தமாக கையில் பச்சைகுத்திய அவரது பெயரை அழித்து பாசிடிவிட்டி என மாற்றிக்கொண்டார்.
இதையும் படியுங்கள்... படுக்கை அறையில் தன் செல்லத்தை கட்டிப்பிடித்து... காதலர் தின வாழ்த்து சொன்ன நடிகை ராஷ்மிகா - வைரலாகும் வீடியோ
இப்படி இரண்டுமுறை காதலில் தோல்வி அடைந்த பின்னர் நயன்தாராவுக்கு காதல் மீதான நம்பிக்கையும், உண்மை காதலுக்கான தேடலும் போகவில்லை. அந்த சமயத்தில் தான் நயன்தாராவுக்கு நானும் ரவுடி தான் படத்தின் கதை சொல்ல சென்றுள்ளார் விக்னேஷ் சிவன். அவர் சொன்ன கதையைப் போல் அவரையும் நயன்தாராவுக்கு மிகவும் பிடித்துப்போனது. பின்னர் நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங்கின் போது இருவருக்கும் இடையேயான காதல் வளர ஆரம்பித்தது.
ஏற்கனவே இரண்டு முறை காதல் தோல்வியை சந்தித்துவிட்டு மூன்றாவதாகவும் நயன்தாரா காதலிப்பதை அறிந்த பலரும் அவரை விமர்சனம் செய்துவந்தனர். அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு உண்மை காதல் ஜெயிக்கும் என்பதை நிரூபிக்கும் விதமாக விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்த நயன்தாரா, அவரை கடந்தாண்டு வெற்றிகரமாக திருமணமும் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு அழகான 2 ஆண்குழந்தைகளும் பிறந்துவிட்டன. இதுவரை காதலர்களாக காதலர் தினத்தை கொண்டாடிய விக்கி - நயன். இந்த ஆண்டு முதன்முறையாக கணவன் - மனைவியாக காதலர் தினத்தை கொண்டாடுகின்றனர்.
இதையும் படியுங்கள்... விஜய்யின் லியோ படத்தில் இணைந்த அஜித் பட நடிகை - காஷ்மீரில் இருந்து வந்த லேட்டஸ்ட் அப்டேட்