கோலிவுட்டில் திருமணமே செய்யாமல் டேட்டிங் செய்யும் காதல் ஜோடிகள் இத்தனை பேரா? என்ன லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது!
காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடும் கோலிவுட் காதல் ஜோடிகளை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமான விஜே கதிரவன், தனது காதலி சினேகா உடன் இந்த ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடி வருகிறார். தனது காதலியை செல்லமாக தேனு என அழைக்கும் கதிரவன், பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது அவரது காதலி சர்ப்ரைஸாக வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது யாராலும் மறக்க முடியாது.
நடிகை தமன்னாவும் இந்த ஆண்டு காதலர் தினத்தை பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் கொண்டாடுகிறார். இவர்கள் இருவரது காதலும் புத்தாண்டு பார்ட்டியின் போது தான் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது ஜாலியாக டேட்டிங் செய்து வரும் இவர்கள், விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த காதலர் தினத்தை அவர் தனது காதலன் ஜாக்கி உடன் தான் கொண்டாடுகிறார். இவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடக்கவும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படியுங்கள்... படுக்கை அறையில் தன் செல்லத்தை கட்டிப்பிடித்து... காதலர் தின வாழ்த்து சொன்ன நடிகை ராஷ்மிகா - வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஓவியா, கடந்த ஓராண்டாகவே துபாயை சேர்ந்த மியூசிசியன் தாரிக் என்பவருடன் டேட்டிங் செய்து வருகிறார். இவருடன் சேர்ந்து தான் இந்த ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடுகிறார் நடிகை ஓவியா. இவர் ஏற்கனவே பிக்பாஸ் போட்டியாளர் ஆரவ்வை ஒருதலைபட்சமாக காதலித்து தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், மும்பையை சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு என்பவரை கடந்த சில ஆண்டுகளாகவே டேட்டிங் செய்து வருகிறார். இந்த காதல் ஜோடி தற்போது லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் திருமணம் பற்றி இருவருமே இதுவரை சொன்னதில்லை. இந்த ஆண்டு அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கோலிவுட்டில் புதிதாக மலர்ந்துள்ள காதல் ஜோடி என்றால் அது சித்தார்த்தும், அதிதி ராவும் தான். கடந்த சில மாதங்களாகவே டேட்டிங் செய்து வரும் இந்த ஜோடி, பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்சில் ஜோடியாக வந்து கலந்துகொண்டு தங்களது காதலை உறுதிப்படுத்தினர். இவர்கள் இருவருமே ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தமிழில் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து தற்போது வில்லனாக மிரட்டி வரும் நடிகர் வினய், தெலுங்கு நடிகை விமலா ராமன் உடன் டேட்டிங் செய்து வருகிறார். இந்த காதல் ஜோடி இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கிஸ் டே ஸ்பெஷல்... நயன்தாராவுக்கு முத்த மழை பொழிந்த விக்னேஷ் சிவன் - வைரலாகும் ரொமாண்டிக் கிளிக்ஸ்
பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகனும், நடிகருமான காளிதாஸ் கடந்த ஆண்டு தான் தனது காதலியை அறிமுகப்படுத்தினார். அவர் மாடல் தாரினி என்பவருடன் தற்போது டேட்டிங் செய்து வருகிறார். துபாயில் தன்னுடைய பிறந்தநாளை தாரினி உடன் கொண்டாடியபோது தான் தங்களது காதல் பற்றி அறிவித்தார் காளிதாஸ்.
தென்னிந்திய சினிமாவில் அதிகம் கிசுகிசுக்கப்படும் ஜோடி விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா தான். இருவரும் தாங்கள் டேட்டிங் செய்வது பற்றி வாயைத்திறக்காவிட்டாலும், அவர்கள் ஜோடியாக வெளிநாடுகளில் சுற்றி வரும் புகைப்படங்கள் அதனை உறுதி செய்துவிட்டன. சமீபத்தில் மாலத்தீவு மற்றும் துபாய்க்கு விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் ஜோடியாக சென்றது குறிப்பிடத்தக்கது.
நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய கல்லூரி நண்பர் ராஜவேலு என்பவரை காதலித்து வருகிறார். கல்லூரியில் படிக்கும்போதிலிருந்து காதலித்து வரும் இந்த காதல் ஜோடி, இந்த ஆண்டு கல்யாண பந்தத்தில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் மூலம் மலர்ந்த மற்றுமொரு காதல் ஜோடி தான் அமீர் - பாவனி. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது துரத்தி துரத்தி காதலித்து வந்த அமீருக்கு பாவனி நோ சொன்னாலும், பிக்பாஸ் முடிந்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயித்ததும் அமீரின் காதலை ஏற்றுக்கொண்டார். தற்போது இருவரும் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆண்டு இவர்களது திருமண செய்து வெளியாகவும் வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்... 600 படிகளில் சூடம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு... பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சமந்தா