கிஸ் டே ஸ்பெஷல்... நயன்தாராவுக்கு முத்த மழை பொழிந்த விக்னேஷ் சிவன் - வைரலாகும் ரொமாண்டிக் கிளிக்ஸ்
கோலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளான விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் முத்தமிட்டுக்கொண்ட அழகிய தருணங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிப்ரவரி மாதம் தொடங்கிவிட்டாலே காதலர் தின கொண்டாட்டங்கள் களைகட்டிவிடும். அந்த வகையில், காதலர் தினமான பிப்ரவரி 14-ந் தேதிக்கு முந்தைய வாரம் முழுவதும் டெடி டே, ஹக் டே, சாக்லேட் டே, கிஸ் டே என ஒவ்வொரு நாளும் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் காதலர் தின கொண்டாட்டங்கள் படு ஜோராக நடைபெற்று வருகின்றன.
நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று கிஸ் டே கொண்டாடப்பட்டு வருகிறது. கிஸ் டேவில் மனதுக்கு பிடித்தவர்களுக்கு முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தலாம். அந்த வகையில், கோலிவுட்டின் மனம்கவர்ந்த ஜோடியான விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் முத்தமிட்டுக்கொண்ட அழகிய தருணங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2015-ம் ஆண்டு காதல் வாழ்க்கையை தொடங்கிய இவர்கள், பல்வேறு வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்படி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது நயனின் நெற்றியில் விக்னேஷ் சிவன் முத்தமிட்ட புகைப்படம் இது.
7 ஆண்டுகள் உருகி உருகி காதலித்த விக்கி - நயன் ஜோடி கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டது. தாலி கட்டியதும் தனது காதல் மனைவி நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் முத்தமிட்ட அழகிய தருணம் இது.
இதையும் படியுங்கள்...Promise day: ஷாலினி சொல்லுக்கு கட்டுப்பட்டு 21 வருஷம் தாண்டி அஜித் காப்பாத்திட்டு வர்ற சத்தியம் பத்தி தெரியுமா
திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் செல்வது ஹனி மூனுக்கு தான். அப்படி விமானத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஹனிமூன் சென்றபோது நயனின் கையின் விக்கி முத்தமிட்ட புகைப்படம் இது.
காத்துவாக்குல ரெண்டு காதல்னு அழகிய ரொமாண்டிக் படத்தை இயக்கிய விக்கி, அதேபோல தன் காதல் மனைவிக்கு காத்துவாக்குல ஃபிளையிங் கிஸ் கொடுத்த புகைப்படம் இது.
ஹனிமூன் கொண்டாட்டத்தின் போது நயன்தாராவின் நெற்றியில் முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்திய இயக்குனர் விக்னேஷ் சிவனின் அழகிய புகைப்படம் இது.
நயன் விக்கி ஜோடி திருமணமான மூன்றே மாதத்தில் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டனர். அதுவும் இரட்டை ஆண் குழந்தைகள். இந்த குழந்தைகளுக்கு உயிர், உலகம் என அழகிய தமிழ் பெயரை வைத்து அவர்களின் பாதத்தில் இருவரும் முத்தமிட்ட அழகிய தருணம் இது.
இதையும் படியுங்கள்... நயன்தாரா மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேன்... லேடி சூப்பர்ஸ்டார் மீது பாசமழை பொழிந்த மாளவிகா மோகனன்