ஜனநாயகன் முதல் விமர்சனம் : விஜய்யின் மாஸ் விருந்து டேஸ்டா? வேஸ்டா?
எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி உள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Jana Nayagan Movie First Review
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். வருகிற 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’, விஜய்யின் கடைசி திரைப்படமாகும். இதை சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜயும் உறுதி செய்தார்.
ஜனநாயகன் முதல் விமர்சனம்
இந்த சூழலில், ‘ஜனநாயகன்’ படத்தை முன்பே பார்த்தவர்கள் கூறிய கருத்துகள் தற்போது சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளன. பிரபல சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சி அந்தணன், ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “படத்தை பார்த்த சிலரிடம் பேசினேன். அவர்கள், ‘எச்.வினோத் இப்படியொரு படத்தை எடுத்திருப்பது ஆச்சர்யம். படம் முழுவதும் வேகமாக செல்கிறது. மூன்று மணி நேரம் ஓடியதே தெரியவில்லை. செல்போனை கூட பார்க்க தோன்றவில்லை. விஜய் இனிமே இப்படியொரு படத்தில் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் வரும் அளவுக்கு இந்த படம் வித்தியாசமாக இருக்கிறது’ என்று சொன்னார்கள்” என தெரிவித்துள்ளார்.
சிக்கலில் ஜனநாயகன்
அந்தணன் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களால் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. முன்பதிவும் நல்ல வரவேற்புடன் நடைபெற்று வருகிறது. ஆனால், வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வசூலை அள்ளுமா ஜனநாயகன்?
இதனால், திட்டமிட்டபடி 9ஆம் தேதி ‘ஜனநாயகன்’ திரையரங்குகளில் வெளியாகுமா என்ற கேள்வி விஜய் ரசிகர்களிடையே கவலையை உருவாக்கியுள்ளது. அடுத்த சில நாட்களில் நிலைமை எப்படி மாறும் என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஜனநாயகன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. படமும் அமோக வரவேற்பை பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி வசூல் படமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

