- Home
- Cinema
- ஜனநாயகன் ஏத்திவிட்ட ஹைப்பால் பகவந்த் கேசரிக்கு செம டிமாண்ட்... ஓடிடியில் முதலிடம் பிடித்து சாதனை
ஜனநாயகன் ஏத்திவிட்ட ஹைப்பால் பகவந்த் கேசரிக்கு செம டிமாண்ட்... ஓடிடியில் முதலிடம் பிடித்து சாதனை
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் பாலய்யா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என சொல்லப்படுவதால், அப்படத்தை ஓடிடியில் ரசிகர்கள் போட்டிபோட்டு பார்த்து வருகின்றனர்.

Balakrishna movie trending due to Vijay film
நாடு முழுவதும் 'ஜனநாயகன்' படத்தின் வருகைக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தளபதி விஜய் நடிக்கும் கடைசிப் படம் என்பதால் இந்தக் காத்திருப்புக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ட்ரெய்லரும் வெளியான பின்னர் 'ஜனநாயகன்' மீதான ஹைப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனுடன் 'பகவந்த் கேசரி' படத்திற்கான வரவேற்பும் அதிகரித்திருப்பது மற்றொரு சுவாரஸ்யமான விஷயமாகும்.
ஓடிடியில் டிரெண்டாகும் பகவந்த் கேசரி
'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக்தான் 'ஜனநாயகன்' என்று செய்திகள் பரவின. ஆனால், 'ஜனநாயகன்' படத்தின் இயக்குனர் எச். வினோத் உட்பட பலரும் இதை மறுத்துள்ளனர். இருப்பினும், ட்ரெய்லரில் உள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டி ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், 'பகவந்த் கேசரி' படத்தை மீண்டும் பார்க்க ரசிகர்கள் தயாராகி வருவதாக ஓடிடி ட்ரெண்டிங் அப்டேட்கள் தெரிவிக்கின்றன. அமேசான் பிரைம் வீடியோவில் 'பகவந்த் கேசரி' ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. தற்போது, அமேசான் பிரைம் வீடியோ ட்ரெண்டிங்கில் 'பகவந்த் கேசரி' முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
பாலகிருஷ்ணாவின் மாஸ் படம்
நந்தமுரி பாலகிருஷ்ணா நாயகனாக நடித்து ஹிட்டான படம்தான் 'பகவந்த் கேசரி'. இப்படம் உலகளவில் 112.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது நந்தமுரி பாலகிருஷ்ணாவின் ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் அனில் ரவிபுடிக்கு டொயோட்டா வெல்ஃபயர் பிராண்டின் புதிய மாடல் காரை பரிசாக வழங்கியது பெரிய செய்தியானது. சுமார் 1.30 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை தயாரிப்பாளர் பரிசாக வழங்கியுள்ளார். ஆந்திர மாநிலங்களில் இருந்து 'பகவந்த் கேசரி' 88.55 கோடி ரூபாயும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து 1.90 கோடி ரூபாயும் வசூலித்ததாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் இப்படம் 14.05 கோடி ரூபாய் வசூலித்ததாக வர்த்தக ஆய்வாளர்களின் பாக்ஸ் ஆபிஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
ஜனநாயகன் தட்டிதூக்குமா?
இப்படத்தில் பாலய்யா மற்றும் ஸ்ரீலீலாவின் அதிரடி நடிப்பு இருப்பதாக 'பகவந்த் கேசரி' பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் ஸ்ரீலீலாவுடன் காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படத்தின் இரண்டாம் பாதி சிறப்பாக இருப்பதாகப் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர். இது ஒரு க்ளீன் ஃபேமிலி என்டர்டெய்னர் என்ற கருத்து நிலவுவதால், அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் கவர்ந்திருந்தது. இது பாலய்யாவின் ஒன் மேன் ஷோவாக இருந்தாலும், இப்படத்தை ஃபேமிலி ஆடியன்ஸ் முழுமையாக ஏற்றுக்கொண்டதால் மாபெரும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. அதே மேஜிக்கை ஜனநாயகன் நிகழ்த்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

