வைகை புயலுக்கு அடித்த ஜாக்பார்ட்; 'பொன்னியின் செல்வன்' நடிகர் படத்தில் இணைந்தார் வடிவேலு!
நடிகர் வடிவேலு ஹீரோயிசம் கேரக்டரில் இருந்த வெளியேறி, மீண்டும் காமெடி நடிகராக மாறிய பின்னர், பட வாய்ப்புகள் அவருக்கு குவியத் துவங்கியுள்ளது. அதன்படி தற்போது 'பொன்னியின் செல்வன்' பட நடிகருடன் காமெடி ரோலில் நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

35 வருடங்களாக ரசிகர்களை மகிழ்விக்கும் வடிவேலு
கோலிவுட் திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளாக தன்னுடைய மிகச் சிறந்த காமெடி மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்து வருபவர் வைகை புயல் வடிவேலு. ஒரு சிலர், வாய்மொழியால் மட்டுமே ரசிகர்களை சிரிக்க வைப்பார்கள். ஆனால், வடிவேலுவின் காமெடியை கொஞ்சம் தினுசானது. ரசிகர்களுக்காக கீழே விழுந்து புரண்டு, அடிவாங்கி, கண்ணீர் வடித்து கூட அவர்களை சந்தோஷப்படுத்துவார். மேலும் இவருடைய உடல் மொழியும், டயலாக் டெலிவரியும் மற்ற காமெடி நடிகர்களிடம் இருந்து இவரை வித்தியாசமாக காட்டியதே இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.
முன்னணி நடிகர்களுடன் காமெடி செய்த வடிவேலு
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பலரையும் தன்னுடைய காமெடியால் சிரிக்க வைத்த வடிவேலு தான் தற்போதைய, மீன்ஸ் கிரியேட்டர்களின் முக்கிய சோர்ஸ் ஆகவும் இருந்து வருகிறார். அதேபோல் இவர் ரஜினி, விஜயகாந்த், சூர்யா, விஜய், அஜித், போன்ற ஹீரோக்களுடன் இணைந்து காமெடி செய்யும்போது அந்த காமெடிகள் வேறு லெவலுக்கு ரசிக்கப்படுவது உண்டு.
'23 ஆம் புலிகேசி' பட வெற்றி:
ஷங்கர் தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில் '23 ஆம் புலிகேசி' படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகர் வடிவேலு திரை உலகில் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என கூறியதால், இவரை சில பெரிய நடிகர்கள் காமெடிக்காக அழைத்த போது கூட அந்த வாய்ப்புகளை தவிர்த்து விட்டார். பின்னர் தனக்கு வெற்றி கொடுத்த, 23ஆம் புலிகேசி படத்தின் சாயலிலேயே இவர் நடித்த தெனாலி, எலி, போன்ற படங்கள் மோசமான தோல்வியை சந்தித்தது. பின்னர் மீண்டும் '23-ஆம் புலிகேசி பார்ட் 2 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட வடிவேலு அந்த படத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தார். இதனால் இந்த படத்தை தயாரித்த இயக்குனர் ஷங்கருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டது.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்:
இதுகுறித்து ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுத்த புகாரின் காரணமாக, வடிவேலுவுக்கு ரெட் கார்ட் விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் வடிவேலு தவிக்கும் நிலை ஏற்பட்டது. ஒரு வழியாக அந்த பிரச்சனைகளை கடந்து தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ள வடிவேலுவு, 2022 ஆம் ஆண்டு 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் மீண்டும் ஹீரோ அவதாரம் எடுத்தார். ஆனால் அப்படம் தோல்வியை தழுவியது. எனினும் மாமன்னன் படம் வடிவேலுவுக்கு நல்ல வரவேற்பையும் சிறந்த குணசித்திர நடிகராகவும் இவரை பார்க்க வைத்தது.
'தங்கலான்' பட ஹிட் பாடலுக்கு அரை மணிநேரத்தில் டியூன் போட்ட ஜிவி பிரகாஷ்!
வடிவேலு நடித்து வரும் கேங்கர்ஸ்
இதைத்தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படத்தில் காமெடியனாக நடித்திருந்தார். இதில் வடிவேலுவின் காமெடி பெரிதாக எடுபடவில்லை. தற்போது 'மாரீசன்' மற்றும் 'கேங்கர்ஸ்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கூடிய விரைவில் இந்த படங்கள் வெளியாக உள்ளதாக, சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
கார்த்தியுடன் வடிவேலு இணையும் புதிய படம்
இதைத்தொடர்ந்து நடிகர் வடிவேலு நடிக்க உள்ள திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது அதன்படி வடிவேலு தற்போது சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வரும் கார்த்தி, இந்த படத்தை தொடர்ந்து நடிக்க உள்ள 29 வது படத்தில் வடிவேலு முக்கிய ரோலில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை டாணாக்காரன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தமிழ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா வழக்கு; கூகுளுக்கு நோட்டீஸ்; நீதிமன்றம் வலியுறுத்தியது என்ன?