'தங்கலான்' பட ஹிட் பாடலுக்கு அரை மணிநேரத்தில் டியூன் போட்ட ஜிவி பிரகாஷ்!
பிரபல இசையமைப்பாளர், ஜிவி பிரகாஷ் 'தங்கலான்' படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலுக்கு அரைமணி நேரத்தில் டியூன் போட்டதாக அறிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்:
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், அரை மணி நேரத்தில் டியூன் போட்ட சூப்பர் ஹிட் பாடல் குறித்து அண்மையில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய கெரியரை துவங்கி, பின்னர் நடிகராக மாறியவர் ஜி வி பிரகாஷ். 2006 ஆம் ஆண்டு வெளியான 'வெய்யில்' திரைப்படத்தின் மூலம் தன்னுடைய இசை பணியை துவங்கிய ஜிவி பிரகாஷ், இடைத்தொடர்ந்து ஓரம் போ, கிரீடம், பொல்லாதவன், எவனோ ஒருவன், என அடுத்தடுத்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார்.
100-ஆவது படத்திற்கு இசையமைத்து வரும் ஜிவி பிரகாஷ்:
தற்போது தன்னுடைய 100-ஆவது படத்திற்கு இசையமைத்து வரும் ஜிவி பிரகாஷ், ஹீரோவாகவும் தன்னுடைய 25ஆவது படத்தை எட்டி உள்ளார். இவர் கடந்த ஆண்டு மட்டும் கேப்டன் மில்லர், மிஷின் சேப்டர் ஒன், சைரன், ரீபெல், கல்வன், டியர், தங்கலான், அமரன், என பல படங்களுக்கு இசையமைத்திருந்தார். இவர் இசையில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக அமரன் திரைப்படத்திற்காக ஜிவி பிரகாஷின் இசை பெரிதும் பாராட்டப்பட்டது.
ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா வழக்கு; கூகுளுக்கு நோட்டீஸ்; நீதிமன்றம் வலியுறுத்தியது என்ன?
'தங்கலான்' படத்தின் இசை :
அதே போல் பா ரஞ்சித் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் 'தங்கலான்' படத்தின் இசை மற்றும் BGM அதிக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கே இ ஞானவேல் ராஜா 150 கோடி பட்ஜெட் செலவு செய்து தயாரித்திருந்தார். இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்க, இவருக்கு ஜோடியாக பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
இதுவே தங்கலான் தோல்விக்கு காரணம்
தங்கம் எடுக்க பழங்குடியினர் எப்படி அடிமையாகப்பட்டனர் என்கிற கதையை ஃபேண்டசியோடு கூறி இருந்தார் பா.ரஞ்சித். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படத்தின், கதை நேர்த்தியாக இல்லாமல் போனதும், பல இடங்களில் ரசிகர்களுக்கு படம் புரியாமல் போனதும் தான், இந்த படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. எனினும் விக்ரம் மற்றும் பார்வதியின் நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டை குவித்தது.
திருமணத்தால் விஜய் டிவி ஹிட் சீரியலுக்கு எண்டு கார்டு போட்ட நடிகை! இனி இவருக்கு பதில் இவர்?
மினுக்கி மினுக்கி பாடலுக்கு அரைமணி நேரத்தில் டியூன் போட்ட ஜிவி
குறிப்பாக இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையில், இடம்பெற்ற மினுக்கி மினுக்கி பாடல்... குழந்தைகள் முதல் பெயரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் விதத்தில் இருந்தது. சமீபத்தில் இந்த படம் குறித்து கூறிய ஜிவி பிரகாஷ், அரை மணி நேரத்தில் இப்பாடலுக்கு டியூன் போட்டதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.