MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கேங்ஸ்டர் கதைகளின் கோட்டை... சென்னையின் ‘இந்த’ ஏரியாவை மையமா வச்சு படம் எடுத்தாலே கன்பார்ம் ஹிட்டு தான்!

கேங்ஸ்டர் கதைகளின் கோட்டை... சென்னையின் ‘இந்த’ ஏரியாவை மையமா வச்சு படம் எடுத்தாலே கன்பார்ம் ஹிட்டு தான்!

Top 6 Chennai Based Hit Movies: தமிழ் சினிமாவில் சென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்கள் வெறும் அடிதடி, ரவுடிசம் போன்ற விஷயங்களை மட்டுமே பேசுவதில்லை.

3 Min read
Author : Ganesh A
Published : Oct 12 2026, 09:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Vada Chennai Based Hit Movies
Image Credit : X

Vada Chennai Based Hit Movies

தமிழ் சினிமாவில் சென்னையை மையமாக வைத்து ஏராளமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதிலும் வடசென்னையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே தனி வரவேற்பு இருக்கிறது. அங்குள்ள மக்களின் வாழ்வியல், நட்பு, காதல், அரசியல், விளையாட்டு, அதிகாரப் போட்டி எனப் பல்வேறு அம்சங்களை இயக்குநர்கள் தங்களது படைப்புகளில் பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக, வெற்றிமாறன், பா.ரஞ்சித், செல்வராகவன் போன்ற இயக்குநர்கள் வடசென்னையை வெறும் ரவுடிசம் நிறைந்த பகுதியாக மட்டும் சித்தரிக்காமல், அங்கு வாழும் மக்களின் உணர்வுகளையும் சமூகப் பின்னணியையும் திரைக்கதையின் முக்கிய அம்சங்களாக மாற்றியுள்ளனர். அந்த வகையில், வடசென்னையின் வெவ்வேறு முகங்களை ரசிகர்களுக்குக் காட்டிய ஆறு திரைப்படங்களையும், அதே கதைக்களப் பின்னணியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு புதிய படத்தையும் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
வடசென்னை
Image Credit : our own

வடசென்னை

வடசென்னையை மையமாக வைத்து வெளியான திரைப்படங்களில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்த படம் வடசென்னை. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த இப்படம், பல ஆண்டுகளாகத் தொடரும் கேங்ஸ்டர்களின் அதிகாரப் போட்டியை மையமாகக் கொண்டு உருவானது. கேரம் விளையாட்டில் திறமைசாலியான அன்பு, எதிர்பாராத சூழ்நிலைகளால் குற்ற உலகத்திற்குள் நுழைகிறார்.

அங்குள்ள மனிதர்களின் துரோகம், பழிவாங்கல், அரசியல் தொடர்புகள் எனப் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் அவர், பின்னர் எப்படித் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார் என்பதே படத்தின் கதை. வெவ்வேறு காலகட்டங்களில் பயணிக்கும் திரைக்கதையும், வடசென்னை மக்களின் வாழ்க்கையை இயல்பாகப் பதிவு செய்த விதமும் இப்படத்திற்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தன.

38
மெட்ராஸ்
Image Credit : X

மெட்ராஸ்

வடசென்னையின் அரசியல் சூழலையும் அங்குள்ள நடுத்தர மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்க்கையையும் அழுத்தமாகப் பதிவு செய்த திரைப்படம் மெட்ராஸ். வியாசர்பாடி, காசிமேடு உள்ளிட்ட வடசென்னைப் பகுதிகளின் வாழ்வியலைப் பின்னணியாகக் கொண்ட இப்படத்தில், குடியிருப்புப் பகுதியில் இருக்கும் ஒரு சுவரைச் சொந்தம் கொண்டாடுவதில் இரண்டு அரசியல் தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படுகிறது.

சாதாரண சுவராகத் தோன்றும் அந்த இடம், அரசியல் அதிகாரத்திற்கான அடையாளமாக மாறுகிறது. இந்தப் பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும் காளி என்ற இளைஞரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களே படத்தின் கதை. நட்பு, காதல், அரசியல் துரோகம், இழப்பு எனப் பல உணர்வுகளை இயல்பாகக் கையாண்ட பா.ரஞ்சித், வடசென்னையின் மற்றொரு முகத்தை ரசிகர்களுக்குக் காட்டியிருந்தார்.

48
சார்பட்டா பரம்பரை
Image Credit : our own

சார்பட்டா பரம்பரை

வடசென்னை என்றாலே கேங்ஸ்டர் கதைகள்தான் என்ற பொதுவான சினிமா பிம்பத்தை மாற்றிய படங்களில் சார்பட்டா பரம்பரைக்கு முக்கிய இடமுண்டு. 1970களில் வடசென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டைக் கலாச்சாரத்தை மையமாக வைத்து உருவான இப்படத்தில், சார்பட்டா மற்றும் இடியாப்ப பரம்பரைகளுக்கு இடையிலான போட்டி முக்கிய அம்சமாக அமைந்திருந்தது.

குத்துச்சண்டை மீது தீராத ஆர்வம் கொண்ட கபிலன், பல்வேறு தடைகளைக் கடந்து எப்படி ஒரு சிறந்த வீரராக உருவெடுக்கிறார் என்பதே படத்தின் கதை. விளையாட்டு மட்டுமின்றி, சமூக அடையாளம், அரசியல், குடும்ப உறவுகள் மற்றும் தனிமனிதப் போராட்டங்களையும் இயக்குநர் பா.ரஞ்சித் அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார்.

58
புதுப்பேட்டை
Image Credit : our own

புதுப்பேட்டை

தமிழ் சினிமாவில் வெளியான மிக அழுத்தமான கேங்ஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுவது புதுப்பேட்டை. குடும்பச் சூழ்நிலையால் வீட்டை விட்டு வெளியேறும் குமார் என்ற சிறுவன், சென்னையின் குற்ற உலகத்தில் அடைக்கலம் தேடுகிறான். உயிர் பிழைப்பதற்காகத் தொடங்கும் அவனது போராட்டம், ஒரு கட்டத்தில் அதிகாரத்திற்கான பயணமாக மாறுகிறது.

சாதாரண இளைஞனாக இருக்கும் குமார், கொக்கி குமார் என்ற பெயரில் மிகப்பெரிய கேங்ஸ்டராக உருவெடுக்கும் விதத்தைச் செல்வராகவன் வித்தியாசமான திரைக்கதையில் பதிவு செய்திருந்தார். குற்ற உலகத்தின் கொடூரம், அரசியல் தொடர்புகள், அதிகார மோகம் மற்றும் மனிதர்களின் சுயநலம் போன்றவற்றை எந்தவித சமரசமும் இல்லாமல் காட்டிய திரைப்படமாக புதுப்பேட்டை இன்றளவும் ரசிகர்களால் பேசப்படுகிறது.

68
ராயன்
Image Credit : IMDB, Youtube, BMS

ராயன்

தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படமும் வடசென்னையின் குற்ற உலகச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு உருவான ஆக்‌ஷன் படங்களில் ஒன்றாகும். சிறுவயதிலேயே குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் ராயன், தனது தம்பிகள் மற்றும் தங்கையைப் பாதுகாப்பதையே வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறார். ஆனால், எதிர்பாராத சம்பவங்களால் அவரது குடும்பம் உள்ளூர் ரவுடிகளுக்கும் அதிகாரப் போட்டிக்கும் இடையே சிக்கிக்கொள்கிறது.

குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ராயன் எடுக்கும் முடிவுகள், அவரை வன்முறை நிறைந்த பாதைக்கு அழைத்துச் செல்கின்றன. குடும்பப் பாசம், துரோகம் மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான இப்படம், தனுஷின் இயக்குநர் பயணத்திலும் முக்கியமான படைப்பாக அமைந்தது. இப்படத்திற்காக தனுஷுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

78
ஜெமினி
Image Credit : X

ஜெமினி

வடசென்னையின் ரவுடிசப் பின்னணியை கமர்ஷியல் சினிமா பாணியில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த திரைப்படங்களில் ஜெமினியும் ஒன்று. விக்ரம் நடித்த இந்தப் படத்தில், வடசென்னையில் செல்வாக்கு மிக்க தாதாவாக வலம் வரும் ஜெமினி, தனது எதிரிகளுடனான மோதல்களையும் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை.

ஆக்‌ஷன், காதல், நகைச்சுவை மற்றும் மாஸ் காட்சிகள் என அனைத்து கமர்ஷியல் அம்சங்களையும் கொண்ட இப்படம், விக்ரமின் திரைப்பயணத்தில் முக்கியமான வெற்றிப் படமாக அமைந்தது. குறிப்பாக, ஜெமினி கதாபாத்திரத்தின் தனித்துவமான உடல்மொழியும் வசனங்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

88
அரசன்
Image Credit : Asianet News

அரசன்

வடசென்னை திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற வெற்றிமாறன், தற்போது சிலம்பரசனை வைத்து அரசன் என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். வடசென்னை யூனிவர்சில் தான் அரசன் படமும் இருக்கும் என்பது ரசிகர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடசென்னையின் குற்ற உலகம், அதிகாரப் போட்டி மற்றும் கேங்ஸ்டர் வாழ்க்கையை வெற்றிமாறன் மீண்டும் எந்தக் கோணத்தில் அணுகப்போகிறார் என்ற ஆர்வம் நிலவுகிறது. குறிப்பாக, சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி முதல்முறையாக இணைவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rajinikanth : வில்லனாக நடித்தாலும் ஸ்டைலில் மிரட்டிய ரஜினி.. வில்லத்தனத்தில் சூப்பர்ஸ்டார் கலக்கிய 5 திரைப்படங்கள்!
Recommended image2
OTT Thriller : கண்ணாமூச்சி விளையாடிய தாய்... அடுத்த நொடியே மாயமான மகள்! ஓடிடியில் திகில் கிளப்பும் வெப் சீரிஸ்
Recommended image3
Soundarya Last Words: ஹெலிகாப்டர் விபத்தில் இறப்பதற்கு முன் நடிகை சௌந்தர்யா பேசிய கடைசி வார்த்தைகள் என்ன?
Related Stories
Recommended image1
Yuvan : யுவனின் OG சம்பவம்... பருத்திவீரன் முதல் பில்லா வரை 2007-ல் யுவன் தொட்டதெல்லாம் ஹிட்
Recommended image2
Tamil Cinema : தமிழ் சினிமாவிற்கு பொற்காலமாக மாறிய 2026... பேக் டூ பேக் ஹிட் படங்களால் மாஸ் காட்டும் கோலிவுட்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved