MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • படத்தில் நடிக்க மறுத்த கே.ஆர்.விஜயாவை தயாரிப்பாளருடன் அனுப்பி வைத்த கணவர்.. பலருக்கும் தெரியாத ஃப்ளாஷ்பேக்..

படத்தில் நடிக்க மறுத்த கே.ஆர்.விஜயாவை தயாரிப்பாளருடன் அனுப்பி வைத்த கணவர்.. பலருக்கும் தெரியாத ஃப்ளாஷ்பேக்..

திருமணத்திற்கு பின் கே.ஆர் விஜயா படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தார். அப்போது நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ramya s
Published : Aug 01 2024, 09:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
KR Vijaya

KR Vijaya

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலுமே கோலோச்சிய நடிகை கே.ஆர். விஜயா. 1963-ம் ஆண்டு தனது திரை பயணத்தை தொடங்கிய அவர் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் நடித்து வந்தார். தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகர்கள் அனைவருடனும் கே.ஆர்.விஜயா ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
actress kr vijaya

actress kr vijaya

குறிப்பாக எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என கிட்டத்தட்ட அனைத்து பெரிய நட்சத்திரங்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார்.. தனக்கென தனி ரசிக பட்டாளத்தையே அவர் உருவாக்கி வைத்திருந்தார். 
புன்னகை அரசி, தெய்வநாயகி என பல பெயர்களால் ரசிகர்கள் அவரை கொண்டாடி தீர்த்தனர். அவரின் கால்ஷீட்காக இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் காத்திருந்தனர். 70களில் அம்மன் கதாப்பாத்திரம் என்றால் இயக்குனர்களின் முதல் சாய்ஸாக கே.ஆர். விஜயா தான் இருந்தார். 

38
kr vijaya

kr vijaya

திரைப்படங்கள் தவிர, அவர் இந்தியா மற்றும் இலங்கையில் ஒளிபரப்பான ராஜ ராஜேஸ்வரி மற்றும் குடும்பம் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கே.ஆர். விஜயா தனது நடிப்புத் திறமைக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். . 70களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் கே.ஆர்.விஜயாவும் ஒருவர். முதலில் கோடிகளில் சம்பளம் வாங்கிய தமிழ் நடிகை என்றால் அது கே.ஆர். விஜயா தான். 

48
KR Vijaya

KR Vijaya

1966-ம் ஆண்டு ஆண்டு பிரபல தொழிலதிபரும், தயாரிப்பாளருமான சுதர்சன் வேலாயுதன் என்பவரை கே.ஆர்.விஜயா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஹேமலதா என்ற மகள் இருக்கிறார். திருமணத்திற்கு நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்தார். அவர் பெரிதாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நடிப்பையே மறக்கும் அளவுக்கு கே.ஆர்.விஜயா இருந்தார். 

58
kr vijaya husband

kr vijaya husband

அப்போது தேவர் ஃபிலிம்ஸின் சாண்டோ சின்னப்ப தேவர் அக்கா தங்கை என்ற படத்தை இயக்க முடிவு செய்தார். மேலும் அக்கா கேரக்டரின் சௌகார் ஜானகியையும், தங்கை கேரக்டரின் கே.ஆர்.விஜயாவையும் நடிக்க வைக்க முடிவு செய்தார். 

68
KR Vijaya

KR Vijaya

இதற்காக கே.ஆர். விஜயாவிடம் பேச அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கே.ஆர். விஜயாவும் அவரின் கணவர் சுதர்சனும் சாண்டோ சின்னப்ப தேவரை வரவேற்று வீட்டில் இருந்த ஒரு சோபாவில் அமர வைத்து பேசிக் கொண்டிருந்தனர். சாண்டோ சின்னப்ப தேவருக்கு அந்த சோபா மிகவும் பிடித்து போனதாகவும். அதில் உட்காரும் போது சுகமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

78
K R Vijaya

K R Vijaya

பின்னர் தான் அக்கா தங்கை என்ற படத்தை தயாரிக்கப் போவதாகவும், அதில் தங்கை கேரக்டரின் கே.ஆர் விஜயா நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். ஆனால் இப்போது நான் நடிப்பை விட்டு ரொம்பவே விலகிவிட்டேன், இப்போது நடிப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம் என்று கண்கலங்கிக் கொண்டே தேவரிடம் கூறியுள்ளார். ஆனால் இவ்வளவு பெரிய நபர் வந்து கேட்கும் போது எப்படி மறுப்பது என்று நினைத்த கே. ஆர். விஜயாவின் கணவர், விஜயா கண்டிப்பா நடிப்பார் என்று தேவரிடம் கூறி உள்ளார்.

 

88
Sando Chinnappa Devar

Sando Chinnappa Devar

இதனை கேட்டு சந்தோஷத்துடன் தேவர் தனது அலுவலகத்திற்கு சென்றுள்ளார். தேவர் அலுவலகத்திற்கு போன சிறிது நேரத்திலேயே ஒரு லாரி வந்தது. அதில் கே.ஆர்.விஜயாவின் வீட்டில் இருந்த சோபா இருந்துள்ளது. கே.ஆர்.விஜயாவும் அவரின் கணவர் சுதர்சனும் இந்த சோபாவை கொடுக்க சொன்னார்கள் என்று கொடுத்துவிட்டு அவரிடம் கையெழுத்தும் வாங்கி சென்றுள்ளனர். அந்த சோபாவை தனது அலுவலகத்தில் போட்டு வைத்தார். எப்போது அலுவலகத்திற்கு சென்றாலும் அந்த சோபாவில் தான் அவர் அமர்வாராம். கே.ஆர். விஜயாவும் சுதர்சனும் எவ்வளவு தாராள குணம் கொண்டவர் என்பதை தேவர் புரிந்துகொண்டாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved