MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முன்னூறு கோடி வசூல்.. தட்டிதூக்கி மாஸ் காட்டிய டாப் 5 தென்னிந்திய திரைப்படங்கள் - ஒரு பார்வை!

முன்னூறு கோடி வசூல்.. தட்டிதூக்கி மாஸ் காட்டிய டாப் 5 தென்னிந்திய திரைப்படங்கள் - ஒரு பார்வை!

கடந்த 2022ம் ஆண்டு மற்றும் இந்த 2023ம் ஆண்டில் வெளியான பல தென்னிந்திய திரைப்படங்கள், சுமார் 300 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2 Min read
Author : Ansgar R
Published : Aug 15 2023, 04:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி உலக அளவில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்த ஒரு திரைப்படம் தான் ஆர்ஆர்ஆர். பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த படத்தில் வெளியான "நாட்டுக்கூத்து" என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

Jailer OTT: வசூலில் மிரட்டி வரும் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா? கசிந்தது தகவல்!

25

தமிழ் திரையுலகில் தற்பொழுது most wanted இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி சுமார் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் கண்ட திரைப்படம் தான் விக்ரம். உலக நாயகனின் ரசிகனான லோகேஷ் கனகராஜ், தான் சிறுவயதில் இருந்து நேசித்த ஒரு நடிகருக்காக இயக்கி வெளியிட்ட திரைப்படம் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது. உலகநாயகன் கமல்ஹாசன் வழக்கம்போல தனது சிறந்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார்.

35

கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டு இரு பாகங்களாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் தனித்தனியே 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடித்த இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் இயக்கியிருந்தார். மக்கள் திலகம் துவங்கி பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் முயன்று எடுக்கமுடியாமல் போன பொன்னியின் செல்வன் நாவலை மிகநேர்த்தியாக படமாகியிருந்தார் மணிரத்னம். இரண்டு பாகங்களும் சுமார் 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

45

கன்னட திரை உலகத்தையே பெருமைப்பட வைத்த திரைப்படமாக திகழ்ந்த ஒருமுறை திரைப்படம் தான் கேஜிஎஃப். இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் உலக அளவில் இந்த திரைப்படம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் யாஷ் நடிப்பில் அந்த படத்தின் அடுத்த பாகமும் உருவாகவுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

55

பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிவரும் திரைப்படம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அசத்தியுள்ள ஜெயிலர் திரைப்படம். இந்த திரைப்படமும் வெளியாகி ஐந்து நாட்கள் ஆன நிலையில் முன்னொரு கோடி ரூபாய் வசூலை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய திரை உலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தனர். குறிப்பாக மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் மற்றும் பாலிவுட்டின் மூத்த நடிகர் ஜாக்கி உள்ளிட்ட பலர் திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய குடியுரிமை பெற்றுவிட்டேன்! சுதந்திர தினத்தில் அக்ஷய் குமார் பகிர்ந்த மகிழ்ச்சியான தகவல்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
ரஜினிகாந்த்
கமல்ஹாசன்
யாஷ்
ஜூனியர் என்டிஆர்
கார்த்தி (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
‘டியூட்’ மமிதாவின் நடிப்பை பார்த்து வாயடைத்துப் போன ‘தாய் கிழவி’ ராதிகா..!
Recommended image2
தம்பிகளை பிளாக்மெயில் பண்ணி காரியத்தை முடித்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image3
கேரளத்து பைங்கிளி.. தமிழ் ரசிகர்களின் செல்லக் கிளி! - ரேஷ்மா முரளிதரன் மிரட்டல் பின்னணி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved