இந்திய குடியுரிமை பெற்றுவிட்டேன்! சுதந்திர தினத்தில் அக்ஷய் குமார் பகிர்ந்த மகிழ்ச்சியான தகவல்!

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், கனடிய குடியுரிமை பெற்றவராக இருந்த நிலையில், தற்போது இந்திய குடிமகனாக மாறிவிட்ட தகவலை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.
 

Bollywood Actor Akshay Kumar gets Indian citizenship on Independence Day

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் அக்ஷய் குமார், இதுநாள் வரை கனடிய குடியுரிமையுடன் வாழ்ந்து வந்த நிலையில், அவர் கனடா நாட்டை சேர்ந்தவராகவே பார்க்க பட்டு வந்தார். இந்தியாவில் வாழ்ந்து கொண்டு, இந்திய குடியுரிமை பெற அவர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது ஒருவழியாக அக்ஷய் குமாருக்கு இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது.

இந்த தகவலை மிகவும் மகிழ்ச்சியுடன் அக்ஷய் குமார், இந்தியாவின் 77-ஆவது சுதந்திர தினமான, இன்று வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்த அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் அறிவித்துள்ளார். அக்ஷய் குமார் தனது கனடிய குடியுரிமையைத் துறந்து, சில மாதங்களுக்கு முன்பு இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது இந்திய பாஸ்போட்டை அவர் பெற்றுள்ளார். ஒரு இந்தியன் என, இந்திய குடியுரிமையோடு கூறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார். 

Bollywood Actor Akshay Kumar gets Indian citizenship on Independence Day

சுதந்திர தினத்தில் இரண்டாவது படத்தை உறுதி செய்த லெஜெண்ட் சரவணன்! வைரலாகும் செலபிரேஷன் வீடியோ!

சரி பஞ்சாபில் பிறந்த அக்ஷய் குமார் எப்படி தெரியுமா கனடா நாட்டு குடியுரிமையை பெற்றார்? "90 களில், அவர் திரையுலகில் உச்சத்தில் இருந்த போது, ​​​​அக்ஷய் குமார் தனது நண்பரின் ஆலோசனையின் பேரில், கனடா செல்ல முடிவு செய்தார். அதனால்தான் அவர் அந்த நாட்டு நடைமுறையின் படி தனக்கு கனடா நாட்டு உரிமையை பெற்றார்". ஆனால் இப்போது அதனை துறந்து இந்திய குடியுரிமையை  பெற்றுள்ளார்.

Bollywood Actor Akshay Kumar gets Indian citizenship on Independence Day

Jailer OTT: வசூலில் மிரட்டி வரும் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா? கசிந்தது தகவல்!

அக்ஷய் குமார், பாலிவுட் திரையுலகில் சுமார் 100 கோடி சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ராகவா லாரன்ஸ் 'காஞ்சனா 2' படத்தை ஹிந்தியில் ரிமேக் செய்த போது அந்த படத்தில், அக்ஷய் குமார் தான் ஹீரோவாக நடித்திருந்தார். அதே போல் சூர்யா நடிப்பில் வெளியாகி தமிழில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'சூரரை போற்று' படத்திலும், சூர்யா கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் சூர்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Bollywood Actor Akshay Kumar gets Indian citizenship on Independence Day

அட்ரா சக்க... வசூலில் பட்டையை கிளப்பும் ஜெயிலர்..! 5-ஆவது நாள் பாக்ஸ் ஆபீஸ் காலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

அக்ஷய் குமார் பாலிவுட் மட்டும் இன்றி, தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்குனர் ஷங்கர் இயக்கிய 2.0 படத்திலும், வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். ரஜினிகாந்தின் நடிப்புக்கு நிகரான பாராட்டுகளை அக்ஷய் குமார் கதாபாத்திரம் பெற்றது. இந்தியாவில் ஒரு முன்னணி நடிகராக இருந்த போதும், கனடா நாட்டு குடியுரிமையுடன் வாழ்ந்து வந்ததால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானதாக கூறப்பட்ட நிலையில் தற்போது தன்னை இந்திய குடிமகனாக மாற்றிக்கொண்டுள்ளார் அக்ஷய் குமார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios