MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Jailer OTT: வசூலில் மிரட்டி வரும் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா? கசிந்தது தகவல்!

Jailer OTT: வசூலில் மிரட்டி வரும் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா? கசிந்தது தகவல்!

திரையரங்குகளில் வசூலில் மாஸ் காட்டி வரும், ஜெயிலர் திரைப்படம் ஓடிடி எப்போது ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது என்கிற தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Aug 15 2023, 04:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், விஜய் நடித்து வெளியான 'பீஸ்ட்' மாபெரும் தோல்வி படமாக அமைந்த நிலையில், இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கிய ஜெயிலர், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக மாறியது. ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், ஒருவழியாக 'ஜெயிலர்' கடந்த வாரம், ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

24

உலகம் முழுவதும் ஜெயிலர் சுமார் 4000 திரையரங்குகளில் வெளியான நிலையில், அணைத்து பகுதியும் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள். படம் வெளியாகி 5 நாட்கள் ஆன பிறகும், இப்படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடி கொண்டிருக்கிறது. அதே போல் இதுவரை சுமார் 350 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருபக்கம் திரையரங்குகளில் 'ஜெயிலர்' திரைப்படம் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு பக்கம் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல்களும் வெளியாகி வருகிறது.

இந்திய குடியுரிமை பெற்றுவிட்டேன்! சுதந்திர தினத்தில் அக்ஷய் குமார் பகிர்ந்த மகிழ்ச்சியான தகவல்!
 

34

ஜெயிலரின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை கலாநிதி மாறனின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சன் நெஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே படம் சன் நெஸ்ட் (Sun NXT) பிளாட்ஃபார்மில் ஒளிபரப்பாகும். மேலும், சன் நெட்வொர்க் அதன் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் பதிப்புகளில் ஜெயிலரின் சாட்டிலைட் உரிமையைப் பெற்றுள்ளது.
 

44

ஜெயிலர், திரையரங்கில் 28 நாள் ஓடிய பின்னர்... சன் நெஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதன்படி  செப்டம்பர் 6 அல்லது 7 ஆம் தேதி ஜெயிலர் ஓடிடி-யில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல், தலைவரின் ரசிகர்களை மேலும் உச்சாகமடைய வைத்துள்ளது. விரைவில் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுதந்திர தினத்தில் இரண்டாவது படத்தை உறுதி செய்த லெஜெண்ட் சரவணன்! வைரலாகும் செலபிரேஷன் வீடியோ!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சிந்தாமணியால் சிக்கப்போகும் ரோகிணி... ஸ்ருதிக்கு வந்த டவுட் - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Recommended image2
படு ஜோராக நடந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண வரவேற்பு... படையெடுத்து வந்து வாழ்த்திய பிரபலங்கள்
Recommended image3
சந்தேகப்பட்ட சரவணன்... அதிரடி முடிவெடுத்த தங்கமயில்; அதிர்ச்சியில் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved