- Home
- Cinema
- ஓடிடியில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய டாப் 5 டக்கரான சிறு பட்ஜெட் படங்கள் - ஒவ்வொன்னும் செம ஒர்த்து..!
ஓடிடியில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய டாப் 5 டக்கரான சிறு பட்ஜெட் படங்கள் - ஒவ்வொன்னும் செம ஒர்த்து..!
ஓடிடி தளங்களில் வார வாரம் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் தொடர்ச்சியாக ரிலீஸ் ஆன வண்ணம் உள்ளன. 2025-ல் வெளியான டாப் 5 சிறு பட்ஜெட் படங்களை பற்றி பார்க்கலாம்.

Top 5 Must Watch Small Budget Tamil Movies
2025-ம் ஆண்டு தமிழ் சினிமா மலைபோல் நம்பி இருந்த கமல், ரஜினி, அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் சொதப்பினாலும், இந்த வருடத்தில் பல எதிர்பாரா ஹிட் படங்களை கோலிவுட் தந்துள்ளது. அதுவும் சில சிறு பட்ஜெட் படங்கள் தியேட்டரில் பெரியளவில் கொண்டாடப்படாவிட்டாலும் ஓடிடியில் ரிலீஸ் ஆன பின்னர் சக்கைப் போடு போட்டு வருகின்றன. அப்படி இந்த ஆண்டு ரிலீஸ் ஆன சிறு பட்ஜெட் படங்களில் ஓடிடியில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய டாப் 5 படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எமகாதகி
ஒரு பிணம் திடீரென எழுந்துவிடுகிறது. அந்த பிணத்தை தூக்கக் கூட முடியாது. பின்னை அதை என்ன செய்தார்கள் என்பதை திகில் கலந்து சொல்லியுள்ள படம் தான் எமகாதகி. இப்படம் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இப்படத்தை பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கி இருக்கிறார். ரூபா, நரேந்திர பிரசாத் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
டூரிஸ்ட் ஃபேமிலி
இலங்கையை சேர்ந்த குடும்பம் ஒன்று திருட்டுத்தனமாக தமிழ்நாட்டுக்குள் வந்துவிடுகிறார்கள். அதன்பின்னர் அவர்கள் சந்திக்கும் சவால்களை சொல்லும் ஒரு அழகான ஃபீல் குட் திரைப்படம் தான் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி. அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
குடும்பஸ்தன்
ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலியில் ஒருவர் தான் வேலைக்கு செல்கிறார் என்றால், அவரை குடும்பத்தினர் எப்படி பார்க்கிறார்கள். அவரை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர் படும் கஷ்டங்களை யதார்த்தமாக சொல்லி உள்ள படம் தான் குடும்பஸ்தன். ராஜேஸ்வர் காளிசாமி இயக்கியுள்ள இப்படத்தில் மணிகண்டன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் ஜீ5 ஓடிடியில் உள்ளது.
டிஎன்ஏ
குடிகாரனாக இருக்கும் ஒரு இளைஞன், borderline personality disorder இருக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட பின்னர் நடக்கும் விஷயங்களை சொல்லும் திரில்லர் படம் தான் இந்த டிஎன்ஏ. இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ளார். இப்படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
லெவன்
ஒரே மாதிரி இருக்கும் இரட்டையர்களை கடத்தும் ஒரு சைக்கோ வில்லன், எதற்காக அவன் அந்த இரட்டையர்களை கடத்தினான். அவனுடைய பின்னணி என்ன? அதைக் கண்டுபிடிக்கும் ஹீரோ என இந்த ஆண்டின் செம திரில்லர் படமாக லெவன் அமைந்துள்ளது. இந்தப் படம் ஆஹா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீம் ஆகி வருகின்றது.