- Home
- Cinema
- மலர் டீச்சர் முதல் இந்து ரெபேகா வர்கீஸ் வரை மனதில் நின்ற சாய் பல்லவியின் டாப் 5 கேரக்டர்ஸ்
மலர் டீச்சர் முதல் இந்து ரெபேகா வர்கீஸ் வரை மனதில் நின்ற சாய் பல்லவியின் டாப் 5 கேரக்டர்ஸ்
நடிகை சாய் பல்லவி இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவர் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த டாப் 5 கதாபாத்திரங்கள் பற்றி பார்க்கலாம்.

மலர் டீச்சர் - பிரேமம்
நடிகை சாய் பல்லவிக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்த படம் என்றால் அது பிரேமம் தான். அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார் சாய் பல்லவி. கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இப்படம் தமிழ்நாட்டில் சக்கைப்போடு போட்டதற்கு முக்கிய காரணம் சாய் பல்லவி தான். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த டீச்சராகவே நடித்திருந்தார் சாய் பல்லவி. மலர் டீச்சர் கேரக்டரில் அவரின் இயல்பான மற்றும் அழகான நடிப்பும், வியக்க வைக்கும் நடனமும் சாய் பல்லவியை வைரல் ஸ்டார் ஆக மாற்றியது.
ரெளடி பேபி அராத்து ஆனந்தி - மாரி 2
நடிகை சாய் பல்லவி தமிழில் அறிமுகமான படம் மாரி 2. பாலாஜி மோகன் இயக்கிய இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சாய் பல்லவி. அப்படம் தோல்வி அடைந்தாலும் அதில் இடம்பெற்ற அவரின் அராத்து ஆனந்தி கேரக்டர் வெகுவாக கொண்டாடப்பட்டது. அதிலும் அவர் ரெளடி பேபி பாடலுக்கு தனுஷ் உடன் சேர்ந்து போட்ட ஆட்டம் செம வைரல் ஆனது. அப்பாடல் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் பாடலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கார்கி
நடிகை சாய் பல்லவியின் சினிமா கெரியரில் திருப்புமுனையாக அமைந்த படங்களில் கார்கியும் ஒன்று. இப்படத்தை கெளதம் ராமச்சந்திரன் இயக்கி இருந்தார். இப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார் சாய் பல்லவி. ஒரு மிடில் கிளாஸ் பேமிலியை சேர்ந்த பெண்ணாக தன்னுடைய நடிப்பால் இப்படத்திற்கு பலம் சேர்த்து இருந்தார் சாய் பல்லவி. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. இப்படத்தின் கிளைமாக்ஸில் அவரின் நடிப்பு வியக்க வைத்தது.
சுமதி - பாவக் கதைகள்
சாய் பல்லவியின் நடிப்புத் திறமைக்கு தீனி போட்ட படங்களில் ஒன்று தான் பாவக் கதைகள். அதில் வெற்றிமாறன் இயக்கிய குறும்படத்தில் சுமதி என்கிற கேரக்டரில் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்திருந்தார் சாய் பல்லவி. வேறு சாதி இளைஞரை திருமணம் செய்ததால் அவரை அவரது சொந்த தந்தையே கொலை செய்வார். அதில் கிளைமாக்ஸ் காட்சியில் சாய் பல்லவியின் நடிப்பு நம்மை கலங்க வைத்தது.
இந்து ரெபேகா வர்கீஸ் - அமரன்
சாய் பல்லவியை பான் இந்தியா அளவில் கொண்டு சேர்த்த படம் என்றால் அது அமரன் தான். அப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக இந்து ரெபேகா வர்கீஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாய் பல்லவி. அந்த கேரக்டரில் முதல் பாதியில் துருதுரு நடிப்பால் கவர்ந்த இவர், பின்னர் 2ம் பாதியில் எமோஷனலான நடிப்பால் ரசிகர்களின் கண்களை குளமாக்கினார். அவரின் நடிப்புக்கு தேசிய விருது கிடைக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.