தெலுங்கு நடிகர்களுடன் ஜோடி போட 'கண்டிஷன்' போட்ட சமந்தா.. அதிர்ச்சியில் டோலிவுட்
நடிகை சமந்தா, தெலுங்கு படங்களில் நடிகர்களுடன் நடிக்க முக்கியமான கண்டிஷன் போட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இது தெலுங்கு சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samantha Ruth Prabhu
தெலுங்கு திரையுலகில் தற்போது ஒரு சூடான செய்தி சுற்றி வருகிறது. நடிகை சமந்தா எடுத்த அதிரடி முடிவு தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இனி அவர் தெலுங்கு படங்களில் நடிக்க, நடிகர்களுக்கு இணையான சம்பளம் கொடுக்க வேண்டும் எனத் தெளிவாகக் கூறியுள்ளாராம்.
Samantha Ruth Prabhu Equal Pay
இல்லையென்றால், எவ்வளவு பெரிய கதையாக இருந்தாலும் அவர் நடிக்க மாட்டாராம். ஏற்கனவே பல தயாரிப்பாளர்களுடன் நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தைகளில் இந்த விஷயத்தைத் தெளிவாகக் கூறிவிட்டாராம் சமந்தா. ஒரு படத்தின் வெற்றிக்கு நடிகர் மட்டுமே காரணமல்ல, நடிகையின் பங்கும் சமமாக இருக்கும். அதற்குரிய மரியாதை வேண்டும் என சமந்தா கூறுகிறாராம்.
Women in South Indian cinema
சமீப காலமாக சர்வதேச தரத்திற்கு இணையான வெப் சீரிஸ்களில் நடித்து தனது ரேஞ்சை உயர்த்தியுள்ள சமந்தா, இப்போது சினிமாவிலும் அதே அளவைப் பராமரிக்க முடிவு செய்துள்ளாராம். இதனாலேயே தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் நடிகர், நடிகைகளுக்கு சமமான சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.
Telugu Actress Equal Rights
சமந்தாவின் இந்த முடிவுக்கு தெலுங்கு திரையுலகில் கலவையான விமர்சனங்கள் வருகின்றனவாம். சில தயாரிப்பாளர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்க, சிலர் யோசனையில் ஆழ்ந்துள்ளனராம். ஆனால் சமந்தா தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்குவது போல் தெரியவில்லை என்கின்றனர்.