- Home
- Cinema
- Samantha: விவாகரத்துக்கு பின் ரூ.48 லட்சம் மதிப்புள்ள நிச்சய மோதிரத்தை சமந்தா என்ன செய்தார் தெரியுமா?
Samantha: விவாகரத்துக்கு பின் ரூ.48 லட்சம் மதிப்புள்ள நிச்சய மோதிரத்தை சமந்தா என்ன செய்தார் தெரியுமா?
நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், அந்த மோதிரத்தை தற்போது சமந்தா என்ன செய்தார் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை சமந்தா ரூத் பிரபு பற்றிய, தகவல்கள் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்படும் ஒன்றாக உள்ளது. சமந்தாவை விவாகரத்து செய்த வேகத்தில், நடிகை சோபிதாவை காதலிக்க துவங்கிய சைதன்யா பின்னர், அவரையே கடந்த ஆண்டு இறுதியில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து
ஆரம்பத்தில் சமந்தா - சைதன்யா விவாகரத்துக்கு காரணம், சமந்தா தான் காரணம் என சில மீடியாக்கள் கிசுகிசுத்து வந்த நிலையில், பின்னர் இந்த விவாகரத்துக்கு காரணம் சோபிதா மீது நாக சைதன்யா கொண்ட காதல் தானா? என்கிற கேள்விகளும் எழுந்தது . திருமணத்துக்கு பின்னர் இதுகுறித்து விளக்கம் கொடுக்கும் விதத்தில் நாக சைதன்யா பேட்டி ஒன்றை கொடுத்தார். அப்போது எங்களின் விவாகரத்துக்கும் - சோபிதாவுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் இந்த வதந்தியால் அதிகம் பாதிக்கப்பட்டது சோபிதா தான் என கூறி இருந்தார்.
சினிமா வரலாற்றில் முதன்முறையாக சம்பள விஷயத்தில் புது டிரெண்டை உருவாக்கிய சமந்தா! குவியும் பாராட்டு
திருமணமான இயக்குனருடன் டேட் பண்ணும் சமந்தா
நாக சைதன்யா இரண்டாவது திருமண வாழ்க்கையில் இணைந்து விட்டாலும், தற்போது வரை சமந்தா தன்னுடைய இரண்டாவது திருமணம் பற்றி எதுவும் அறிவிக்கவில்லை. அதே நேரம் கடந்த சில மாதங்களாக ஏற்கனவே திருமணம் ஆனா பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் சமந்தா டேட் செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இருவரும் எதையும் வெளிப்படையாக கூறவில்லை.
சமந்தாவின் மோதிரம் பென்டென்ட்டாக மாற்றம்:
இது ஒருபுறம் இருக்க சமந்தாவுக்கு, நாக நாக சைதன்யா திருமணத்தின் போது அணிவித்த நிச்சயதார்த்த மோதிரம் பற்றிய தகவல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதாவது சமந்தா தனது நிச்சயதார்த்த மோதிரத்தை ஒரு பெடண்டாக மாற்றி... அதற்காக ஒரு நெக்லஸை உருவாக்கியுள்ளார். சமந்தா இந்த பெடண்டை பல நிகழ்ச்சிகளில் பயன்படுத்தியுள்ளார். சமந்தா இந்த பெடன்ட்டை அடிக்கடி பயன்படுத்துகிறார் என கூறப்படுகிறது.
சினிமாவில் 15 ஆண்டுகள் நிறைவு செய்த சமந்தா –ஆசிர்வதிக்கப்பட்டவராக உணர்கிறேன்!
திருமண உடையில் ஏற்கனவே மாற்றம் செய்த சமந்தா
ஏற்கனவே சமந்தா 2024 ஆம் ஆண்டு, விருது வழங்கும் விழாவிற்கு ஏற்றவாறு தன்னுடைய திருமண கவுனை மாற்றி வடிவமைத்திருந்தார். அந்த வகையில் தான் தன்னுடைய 48 லட்சம் மதிப்புள்ள இந்த, மோத்திரத்தை பெண்டெண்டாக மாற்றி அசரவைத்துள்ளார்.
நாக சைதன்யாவும், சமந்தா ரூத் பிரபுவும் 6 வருடங்களுக்கு மேல் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணத்திற்கு பின் நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2021 இல் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.