தோல்வியை கண்டு துவண்டு போகாத லெஜண்ட்...அடுத்த படப்பிடிப்புக்கு ரெடியாகிட்டாராம் ?
கிட்டத்தட்ட 45 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள தி லெஜண்ட் படம் வெறும் 12.5 கோடிகளை மட்டுமே வசூலித்திருந்தது. கிட்டத்தட்ட 30 கோடிகளுக்கு மேல் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் படம் தோல்வியை சந்தித்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
The Legend
பிரபல தொழிலதிபரான லெஜெண்ட் சரவணன் சமீபத்தில் நடித்த படம் 2500 திரையரங்குகளில் பிரமாண்டமாக திரை கண்டது.. அதோடு இந்த படம் சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் படம் வெளியான சில நாட்களிலேயே பின்தங்கியது.
the legend
பிரபல இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கியிருந்த இந்த படத்தில் பாலிவுட் நாயகியின் ஊர்வசி ரவுத்தேலா நாயகியாக நடித்திருந்தார். முன்னதாக இவரின் விளம்பர படங்களை இந்த இயக்குனர் ஜோடி தான் இயக்கியிருந்தது.
மேலும் செய்திகளுக்கு...விருமன் வெற்றியில் ஒரு பங்கை நடிகர் சங்கத்திற்கு கொடுத்த சூர்யா! எவ்வளவு தெரியுமா?
the legend
தனது சொந்த தயாரிப்பில் பிரம்மாண்டமாக எடுத்திருந்தார் சரவணன் அருள். இந்த படத்தில் மறைந்த விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வெளிநாட்டிலிருந்து திரும்பும் விஞ்ஞானி ஒருவர் உள்ளூர் பிரச்சினையை தீர்ப்பதற்காக முயற்சி எடுக்கும் கதை களத்தை கொண்டு இருந்தது.
மேலும் செய்திகளுக்கு... "கதாநாயகிகள் போஸ்டரில் இடம் பெறுவதே பெரிய விஷயம்"..ஆதங்கத்தை கொட்டிய தமன்னா
the legend
இந்த படத்தில் ஓவர் டோஸ் கொடுக்கப்பட்டிருந்தாக விமர்சங்கள் எழுந்தன. இதில் இடம் பெற்றிருந்த சண்டை காட்சிகளிலும், நடன காட்சிகளிலும் நாயகன் ரோபோ போல இருந்ததாகவும் பலரும் கலாய்த்து தள்ளினர். கடந்த ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ் ஆனது. அதோடு முன்னணி நாயகர்களுக்கு கிடைக்காத அதிகாலை காட்சி தி லெஜெண்டுக்கு கிடைத்திருந்தது.
மேலும் செய்திகளுக்கு...தந்தையின் முத்தத்திற்கு அர்த்தம் சொன்ன கவிஞன்...நா. முத்துக்குமாரின் நினைவு நாள் இன்று
கிட்டத்தட்ட 45 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் வெறும் 12.5 கோடிகளை மட்டுமே வசூலித்திருந்தது. கிட்டத்தட்ட 30 கோடிகளுக்கு மேல் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் படம் தோல்வியை சந்தித்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
the legend
இந்த படத்தின் டிரைலர் கூட பிரம்மாண்டமாகத்தான் வெளியாகியிருந்தது முன்னணி நாயகிகளை கொண்டு டிரைலரை வெளியிட்டு இருந்தார் சரவணன் அருள். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பான் இந்தியா மூவியாக உருவாகி இருந்தது இந்த படம்.
முதல் படம் தோல்வியை சந்தித்த போதிலும் அசராத சரவணன் அருள் தற்போது இரண்டாவது படத்திற்கு தயாராகி விட்டாராம். இதற்காக பிரபல இயக்குனர்கள் பலரையும் அழைத்து கதை கேட்டு வருகிறாராம் நாயகன். முன்னதாக இவர் நடித்த சரவணா ஸ்டோர் விளம்பரங்கள் பல விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தன. இருந்தும் இதற்கெல்லாம் அஞ்சாமல் தான் இவர் நாயகனாக உருவெடுத்தார். இந்நிலைகள் மீண்டும் ஒரு படம் இவர் நடிக்க இருப்பது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.