ராஷ்மிகாவிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ரசிகர்கள்...பதறிப்போன வாரிசு பட நாயகி..
பவுன்சர்களை மீறி ரசிகர்கள் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Rashmika Mandanna
கடந்த 2016ஆம் ஆண்டு சினிமா துறையுலகில் அடி எடுத்து வைத்தவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட மொழி திரைப்படம் மூலம் என்ட்ரி கொடுத்த இவருக்கு அங்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. 2018 ஆம் ஆண்டு தெலுங்கிலும் அறிமுகமானார் ரஸ்மிகா. அந்த ஆண்டு இவர் நடித்த கீதா கோவிந்தம் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் இவருக்கு நல்ல புகழை சேர்த்தது. விஜய் தேவரைக்கொண்டவுக்கு ஜோடியாக இந்த படத்தில் தோன்றி ரசிகர்களை வெகுவாக ஈர்த்து இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...சத்தமில்லாமல் நடந்த பிரபல இயக்குனரின் திருமணம்... வைரலாகும் புகைப்படங்கள் இதோ
Rashmika Mandanna
இதைத்தொடர்ந்து இவர் நடித்த டியர் காம்ரேட் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அபர்ணா தேவி என்கிற பெயரில் விஜய் தேவார கொண்டவுடன் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். பின்னர் 2021 ஆம் ஆண்டு சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் கார்த்தியை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் மயக்கி இருந்தார். தொடர்ந்து வெளியான புஷ்பா தி ரைஸ் திரைப்படம் இவரை தென்னிந்தியாவின் முன்னணி நாயகி ஆகிவிட்டது.
மேலும் செய்திகளுக்கு...செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தீவிரவாதி...கொந்தளிக்கும் பாரதி ...என்ன செய்ய போகிறார் தெரியுமா?
Rashmika Mandanna
ஸ்ரீவிள்ளி என்ற பெயரில் கிராமத்து பெண்ணாக துருதுருவென இவர் வெளிப்படுத்திய நடிப்பு உலகளவில் பாராட்டுகளையும் பெற்றது. இதனால் பான் இந்தியா அளவில் இவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.
அந்த வகையில் தெலுங்கில் மட்டுமல்லாமல் பாலிவுட், தமிழில் என பல பட வாய்ப்புகள் இவர் கைவசம் உள்ளது. அதன்படி தற்போது தமிழில் விஜய் நடித்தவரும் வாரிசு படத்தில் இவர் தான் நாயகி. இந்த படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்து வருகிறார் ராஷ்மிகா. இதில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, ஷாம் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தோன்ற உள்ளனர் அதோடு பாலிவுட் அமிதாப்பச்சன் உடன் குட்பை மிஷன் மஜ்னு பலர் நடித்து முடித்துள்ளார்.
Rashmika Mandanna
அதோடு அமிதாப் பச்சனுடன் குட்பை படத்தின் நடித்து முடித்துள்ளார். இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த படம் வரும் அக்டோபர் ஏழாம் தேதி திரைக்கான உள்ளது. இந்நிலையில்.ராஸ்மிகா மந்தனாவிடம் ரசிகர்கள் தகாத முறையில் நடந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் மும்பையில் உள்ள ஒரு விநாயகர் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளார் ராஸ்மிகா.
மேலும் செய்திகளுக்கு...பாரதிராஜாவுக்கு திருமணம் செய்தே தீருவேன்...அடம்பிடிக்கும் இளையராஜா
Rashmika Mandanna
அங்கு கூட்டத்திலிருந்த ரசிகர்கள் இவருடன் கைகொடுத்தும் செல்பி எடுக்கவும் முயன்றனர். அப்போது ரசிகர்களில் சிலர் இவரது உடலை தொட்டு தகாத முறையில் நடந்து கொண்டுள்ளனர். இதனால் ராஸ்மிகா மிகுந்த அதிர்ச்சிஅடைந்துள்ளார்.
Rashmika Mandanna
பவுன்சர்களை மீறி ரசிகர்கள் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. முன்னணி நாயகியாகிவிட்ட ராஷ்மிகா இது போன்ற பொது இடங்களுக்கு வந்திருப்பதை தவிர்த்து இருக்க வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.