ஜன நாயகன் vs தி ராஜா சாப் : முன்பதிவில் அதிக வசூலை வாரிசுருட்டியது யார்?
2026-ம் ஆண்டின் முதல் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் மோதல் ஜனவரி 9-ம் தேதி நடைபெற உள்ளது. தளபதி விஜய் நடித்த 'ஜன நாயகன்' மற்றும் பிரபாஸின் 'தி ராஜா சாப்' ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன.

Jana Nayagan vs The Raja Saab Box Office
தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களான தளபதி விஜய் மற்றும் பிரபாஸ் இடையே ஜனவரி 9 அன்று பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி நிலவ உள்ளது. இருவரின் படங்களான ஜன நாயகன் மற்றும் தி ராஜா சாப் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. வசூல் விவரங்களே யார் வெல்வார் என்பதை தீர்மானிக்கும். தளபதி விஜய்யின் கடைசி படமான 'ஜன நாயகன்' ஜனவரி 9 அன்று வெளியாகிறது. எச். வினோத் இயக்கும் இந்தப் படம், ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஒரு ஆக்சன் த்ரில்லர் அரசியல் டிராமா.
முன்பதிவில் மாஸ் காட்டும் ஜன நாயகன்
விஜய்யின் 'ஜன நாயகன்' படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதுவே அவரது கடைசிப் படம் என்பதால் ரசிகர்கள் அவரை இனி திரையில் பார்க்க முடியாது. இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 'ஜன நாயகன்' படத்தின் முன்பதிவு அமோகமாக உள்ளது. வெளிநாட்டு சந்தையில் இப்படம் இதுவரை ரூ.35 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்தியாவில் பிளாக்டு சீட்களுடன் ரூ.10.30 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் முன்பதிவு வாயிலாக ரூ.45.30 கோடி வசூலித்துள்ளது இப்படம்.
தி ராஜா சாப் முன்பதிவு வசூல்
இயக்குநர் மாருதியின் 'தி ராஜா சாப்' படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் ஜனவரி 9 அன்று வெளியாகிறது. இப்படத்திற்கும் எதிர்பார்ப்பு இருந்தாலும், 'ஜன நாயகன்' படத்துடன் ஒப்பிடுகையில் வரவேற்பு குறைவாக உள்ளது. இதன் பட்ஜெட் ரூ.350 கோடி. பிரபாஸின் 'தி ராஜா சாப்' ஒரு ஹாரர் காமெடி படம். இதன் முன்பதிவு தொடங்கியுள்ளது. வெளிநாட்டு சந்தையில் ரூ.9 கோடியும், இந்தியாவில் ரூ.5 கோடியும் வசூலித்துள்ளது.
வெல்லப்போவது யார்?
இது 'ஜன நாயகன்' வசூலில் பாதியாகும். இப்படத்தில் பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார், ஜரீனா வஹாப், சஞ்சய் தத் ஆகியோர் நடிக்கின்றனர். 'ஜன நாயகன்' மற்றும் 'தி ராஜா சாப்' முன்பதிவை வைத்து, விஜய்யின் படம் பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தும் என வர்த்தக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பிரபாஸின் படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தாலும், 'ஜன நாயகன்' அளவிற்கு இல்லை என்பதே தற்போதைய நிலவரமாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

