- Home
- Cinema
- பாக்ஸ் ஆபீஸில் ஜெயிக்குமா ஜன நாயகன்? பழைய கதையில் புதுமையான அரசியல் டயலாக்ஸ் - ரசிகர்களின் ரியாக்ஷன்!
பாக்ஸ் ஆபீஸில் ஜெயிக்குமா ஜன நாயகன்? பழைய கதையில் புதுமையான அரசியல் டயலாக்ஸ் - ரசிகர்களின் ரியாக்ஷன்!
Jana Nayagan Trailer Review Political Dialogues Box Office Prediction : விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படத்தின் டிரைலர் வெளியான நிலையில் ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Jana Nayagan Movie Trailer Review Tamil
விஜய்யின் கடைசி படமாக உருவாகியிருக்கும் ஜன நாயகன் படத்தின் டிரைலர் வெளியான நிலையில் ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் டிரைலரில் எல்லாமே தெரிய வந்துள்ளது. இந்தப் படம் பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக திரைக்கு வருகிறது. இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜன நாயகன். இன்னும் 5 நாட்களில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. விஜய்யின் கடைசி படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
Jana Nayagan Political Dialogues
ஜன நாயகன் படத்தில் விஜய் உடன் இணைந்து பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரைன், நாசர், சுனில், ரெபே மோனிகா ஜான், மோனிஷா பிளெஸி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மலேசியாவில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு பேசினர். அப்போது பேசிய விஜய் இது தான் தனது கடைசி படம் என்று கூறினார். இருக்கும் வரையில் எல்லோருக்கும் நல்லதே செய்யவேண்டும் என்று தனது குட்டி ஸ்டோரி மூலமாக தெளிவாக எடுத்துரைத்தார்.
Jana Nayagan Movie Story Leak
ஏற்கனவே இந்த படத்தில் இடம் பெற்ற தளபதி கச்சேரி, ஒரு பேரே வரலாறு, செல்ல மகள் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதில் செல்ல மகள் பாடலை விஜய் பாடியிருக்கிறார். இந்த நிலையில் தான் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில் அதற்கு போட்டியாக ஜன நாயகன் படத்தின் டிரைலர் வெளியானது. இந்த நிலையில் தான் இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் திரைக்கு வந்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்கா இல்லையா என்ற ஒரு குழப்பம் இருந்த நிலையில் டிரைலரில் உண்மை என்று தெரிய வந்துள்ளது.
Will Jana Nnayagan be a Hit or Flop?
அதன்படி அப்பா மகள் பாசப்பிணைப்பு முதல் ஆக்ஷன் காட்சிகள் வரையில் எல்லாமே பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று தெரியவந்துள்ளது. நெட்டிசன்களும் பகவந்த் கேசரி படத்தின் புகைப்படங்களை வைத்து சுட்டிக்காட்டி வருகின்றனர். இதில் என்ன ஆறுதலான விஷயம் என்றால், விஜய் தனது அரசியல் பயணத்திற்காக இந்தப் படத்தில் அரசியல் வசனங்களை பேசுகிறார். இது தான் படத்தின் புதுசா தெரிகிறது, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
Latest Tamil Political Action Movies 2026
அதோடு 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி ஒவ்வொரு செயலையும் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் அரசியல் வசனங்களை பயன்படுத்தியிருக்கிறார். அதன்படி என்ன பேசியிருக்கிறார் என்றால், உன்னை காலி பண்ணிடுவேன், அசிங்கப்படுத்திடுவேன் என்று சொல்ற எவனா இருந்தாலும் சரி, திரும்பி போற ஐடியாவே இல்ல, ஐ ஆம் கம்மிங், மக்களுக்கு நல்லது பண்ணுறதுக்கு அரசியலுக்கு வாங்கடா என்றால், கொள்ளையடிப்பதற்கும், கொலை பண்ணுவதற்குமா அரசியலுக்கு வர்றீங்க என்று கேட்டு கேட்டு தனது சாட்டையால் அடிக்கிறார்.
Thalapathy Vijay Jana Nayagan Trailer
தனது படத்தில் விஜய் அரசியல் வசனங்கள் பேசியது ஜன நாயகன் படத்தின் புதுமையை காட்டுகிறது. என்னதான் இருந்தாலும் படம் பகவந்த் கேசரி ரீமேக். இன்னும் ஒன்று மற்ற மொழி படங்கள் தமிழ் ரீமேக்கில் கோடி கோடியாய் வசூல் குவித்திருக்கிறது. ஒரு சில படங்கள் தோல்வியும் கண்டிருக்கிறது. எது எப்படியோ ஜன நாயகன் விஜய்யின் கடைசி படம். ஹிட் கொடுக்குமா? ரூ.1000 கோடி வசூல் குவிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ஜன நாயகன் படத்தில் விஜய் வெற்றி கொண்டான் கதாபாத்திரத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கௌதம் மேனன் மகளாக மமிதா பைஜூ விஜி ஸ்ரீகாந்த் என்ற ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.