தளபதிக்கு தண்ணிகாட்டும் சென்சார் போர்டு... ஜன நாயகன் ரிலீஸ் தள்ளிப்போகிறதா?
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இதுவரை அப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை.

Jana Nayagan Censor Certificate Delay
தமிழ் சினிமாவிற்கு பொங்கல் ஒரு உச்சகட்ட சீசன். திரையரங்குகள் நிறையும் பண்டிகைக் காலம் என்பதால் போட்டியும் இயல்பானது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளன. இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு 'ஜன நாயகன்' மீது தான் இருக்கிறார். ஏனெனில் இது விஜய்யின் கடைசி படம். அதுமட்டுமின்றி அது வலுவான அதிகார மையங்களை எதிர்த்துப் போராடி மக்களை வழிநடத்தும் ஒரு தலைவரை உருவாக்குவதே விஜய் படத்தின் அரசியல் நோக்கமாக இருக்கும். விஜய் திராவிட அரசியலுக்கு எதிரானவர் இல்லை என்றாலும், மக்கள் தலைவராக தனது அரசியல் பிம்பத்தை உருவாக்குவதே இந்தப் படத்தின் இலக்காக இருக்கும்.
சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை
இந்த நிலையில் 'ஜன நாயகன்' வெளியீட்டுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இப்படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. டிசம்பர் 19 அன்று படத்தைப் பார்த்த சென்சார் போர்டு, பத்துக்கும் மேற்பட்ட மாற்றங்களைப் பரிந்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு மாற்றங்கள் செய்து மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டும், சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை. ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் வெளியீடாக வரவிருக்கும் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகுமோ என்ற கவலையில் விஜய் ரசிகர்கள் உள்ளனர்.
நீதிமன்றத்தை நாட முடிவு
புதன்கிழமைக்குள் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காவிட்டால் ஜனவரி 9-ந் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை. படம் வெளியாகும் நேரத்தில் சென்சார் போர்டின் இந்த நடவடிக்கை அசாதாரணமானது என தவெக வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன. சென்சார் போர்டின் நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை அணுக தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாராகி வருகிறது. எச். வினோத் 'ஜன நாயகன்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
கெரியரின் கடைசிப் படம்
பல தசாப்தங்களாக நீடித்த தனது அபூர்வமான சினிமா பயணத்திற்கு 'ஜன நாயகன்' என்ற படத்துடன் நடிகர் விஜய் முற்றுப்புள்ளி வைக்கிறார். இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணா இப்படத்தை தயாரிக்கிறார். ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் லோஹித் என்.கே. இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

