இன்னும் ஷூட்டிங்கே முடியல... அதற்குள் ரூ.180 கோடி வசூல்..! ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டிய விஜய்யின் ‘வாரிசு’
Varisu : வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியாத போதும், அப்படத்தின் வியாபாரம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் தோல்வியை தழுவியது. இதையடுத்து அவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. தெலுங்கில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய வம்சி தான் இப்படத்தை இயக்கி வருகிறார். இவர் இயக்கும் இரண்டாவது தமிழ் படம் இதுவாகும். ஏற்கனவே கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார்.
வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக டிரெண்டிங் ஹீரோயினான ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதுதவிர பிரபு, ஷியாம், சரத்குமார், குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா, யோகிபாபு, எஸ்.ஜே.சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. பிரபல டோலிவுட் தயாரிப்பாளரான தில் ராஜு இப்படத்தை தயாரித்து வருகிறார்.
வாரிசு படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதன்மூலம் அவர் முதன்முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படமும் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைகாண உள்ளது. இதனால் படப்பிடிப்பும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... ஆளே இல்லாமல் காத்துவாங்கும் தியேட்டர்கள்.. ஆனா வசூல் ரூ.250 கோடியா?- எல்லாம் பொய்.. வசமா சிக்கிய பிரம்மாஸ்திரா
வாரிசு படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியாத போதும், அப்படத்தின் வியாபாரம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதன்படி இப்படத்தின் சாட்டிலைட் உரிமை ரூ.50 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை ரூ.60 கோடிக்கும், வெளிநாட்டு உரிமை ரூ.32 கோடிக்கும், இந்தி டப்பிங் உரிமை ரூ.32 கோடிக்கும், ஆடியோ உரிமை ரூ.10 கோடிக்கும் விற்பனையாகி உள்ளது.
varisu
இதன்மூலம் அப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ.184 கோடி வசூல் ஈட்டி உள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளின் திரையரங்க வெளியீட்டு உரிமை இன்னும் விற்கப்படவில்லை. அது விற்கப்பட்டால் அதன்மூலம் ரூ.100 கோடி கிடைக்கும் என கூறப்படுகிறது. அப்படி பார்த்தால் 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் ரிலீசுக்கு முன்பே 80 கோடிக்கு மேல் லாபம் பார்த்துள்ளது. இதனால் தயாரிப்பாளர் படு குஷியில் உள்ளாராம்.
இதையும் படியுங்கள்... சென்சார் அப்டேட் வந்தாச்சு... வெந்து தணிந்தது காடு படத்துக்கும் 4 மணி ஷோ இல்லை - FDFS எத்தனை மணிக்கு தெரியுமா?