ஆளே இல்லாமல் காத்துவாங்கும் தியேட்டர்கள்.. ஆனா வசூல் ரூ.250 கோடியா?- எல்லாம் பொய்.. வசமா சிக்கிய பிரம்மாஸ்திரா
Brahmastra : 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிரம்மாஸ்திரா திரைப்படம் மூன்றே நாட்களில் ரூ.250 கோடி வசூலித்துள்ளது என்று படக்குழு போலியான விளம்பரங்களை செய்து வருவதாக நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.
அயன் முகர்ஜி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் பிரம்மாஸ்திரா. இதில் நடிகர் ரன்பீர் கபூர் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆலியா பட் நடித்திருக்கிறார். கரண் ஜோகர் தயாரித்துள்ள இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ரிலீசுக்கு முன்பே இப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் கிளம்பின.
இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசான இப்படம் முதல் நாளில் 75 கோடி வசூலித்ததாகவும், இரண்டாம் நாள் முடிவில் 160 கோடி வசூலித்ததாகவும், மூன்றம் நாள் முடிவில் 250 கோடி வசூலித்ததாகவும் படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் இப்படம் சுமாராக உள்ளதாக முதல் நாளில் இருந்தே விமர்சனங்கள் வருகிற போது எப்படி இவ்வளவு சம்பாதித்தது என்பது புரியாத புதிராக உள்ளது.
இதையும் படியுங்கள்... சென்சார் அப்டேட் வந்தாச்சு... வெந்து தணிந்தது காடு படத்துக்கும் 4 மணி ஷோ இல்லை - FDFS எத்தனை மணிக்கு தெரியுமா?
இந்நிலையில், 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் மூன்றே நாட்களில் ரூ.250 கோடி வசூலித்துள்ளது என்று படக்குழு போலியான விளம்பரங்களை செய்து வருவதாக நெட்டிசன்கள் சாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி இப்படம் பார்க்க தியேட்டரில் ஆளே வராமல் காத்து வாங்கி வருவதாக புக்கிங் விவரங்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.
ஆளே இல்லாத தியேட்டரில் தான் பிரம்மாஸ்திரா ரூ.225 கோடி வசூலித்ததா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி சில இடங்களில் ஆன்லைனில் டிக்கெட் புல் ஆனதுபோல் காட்டிவிட்டு தியேட்டரில் போய் பார்த்தால் ஆளே இல்லை என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். ஒரு சிலரோ, போறபோக்கை பார்த்தால் இப்படம் வேற்று கிரகங்களிலும் 100 கோடி, 1000 கோடி வசூலித்தது என்று சொல்வார்கள் போல என விமர்சித்துள்ளார். இப்படத்தை பற்றி நெட்டிசன்கள் போட்டுள்ள டுவிட் இதோ...