MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சென்சார் அப்டேட் வந்தாச்சு... வெந்து தணிந்தது காடு படத்துக்கும் 4 மணி ஷோ இல்லை - FDFS எத்தனை மணிக்கு தெரியுமா?

சென்சார் அப்டேட் வந்தாச்சு... வெந்து தணிந்தது காடு படத்துக்கும் 4 மணி ஷோ இல்லை - FDFS எத்தனை மணிக்கு தெரியுமா?

Vendhu Thanindhathu Kaadu : கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் FDFS குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
| Updated : Sep 13 2022, 07:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் சிம்பு நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை சித்தி இதானி நடித்திருக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ், சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் சிம்பு 19 வயது இளைஞனாக நடித்துள்ளார். இதற்காக அவர் 15 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்து நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சித்தார்த்தா நூனி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... பெண்களை கவரும் வண்ணங்களில் விற்பனைக்கு வந்த 'பொன்னியின் செல்வன்' பட்டு புடவைகள்! குவியும் ஆடர்கள்!

34

வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. தமிழகத்தில் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்துக்கான புரமோஷன் பணிகளையும் மிகப்பெரிய அளவில் செய்து வருகின்றனர். இப்படத்துக்கான முன்பதிவும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

44

இந்நிலையில், இப்படத்தின் சென்சார் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி வெந்து தணிந்தது காடு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இப்படம் 2 மணிநேரம் 53 நிமிடம் ரன்னிங் டைம் கொண்டுள்ளது. கடந்த மாதம் முதல் தமிழில் ரிலீசாகும் படங்களுக்கு அதிகாலை 4 மணிகாட்சி திரையிடப்படுவதில்லை. அதே நிலை தான் தற்போது வெந்து தணிந்தது காடு படத்துக்கும் வந்துள்ளது. இப்படத்தின் FDFS 5 மணிக்கு தான் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதையும் படியுங்கள்... தளபதி 67 வேற லெவல் அப்டேட்... பாலிவுட் நடிகரை வில்லனாக்கும் லோகேஷ்..! சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிலம்பரசன்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved