தளபதி மகன்னா சும்மாவா..! இயக்குனராக மாறி பட்டையை கிளப்பும் சஞ்சய்... வெளியான ரீசன்ட் போட்டோஸ்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவருடைய மகன் சஞ்சய் தற்போது கனடாவில் திரைப்பட இயக்கம் குறித்த படிப்பை படித்து வரும் நிலையில், இவர் இயக்குனராக மாறி பல்வேறு இடங்களில் குறும்படத்தின் படப்பிடிப்பு நடத்தும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
கோலிவுட் திரை உலகில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படம், ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மூன்று வாரங்களை எட்டியுள்ள நிலையில், 300 கோடி வசூலையும் நெருங்கி விடுகிறது.
இந்த படத்தைத் தொடர்ந்து விஜய் தன்னுடைய 67 வது படத்தை, மாஸ்டர் படத்தை தொடர்ந்து... இரண்டாவது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் குறித்த தகவல்கள் அப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில், இன்று படம் இப்படம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dasara Teaser: கீர்த்தி சுரேஷையே காணுமே...! நானியின் மிரள வைக்கும் நடிப்பில் வெளியான 'தசரா' டீசர்!
விஜய்யை பற்றி எந்த தகவல் வெளியானாலும், எப்படி ரசிகர்கள் கொண்டாடுகிறார்களோ, அதே போல் அவரின் வாரிசுகளான, சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா குறித்து எந்த தகவல் வெளியானாலும் அதனை சமூக வலைதளத்தில் வைரலாக விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
விஜய்யின் மகன் சஞ்சய், தற்போது கனடா நாட்டில் திரைப்பட இயக்கம் குறித்த படிப்பை பயின்று வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே... இவருடைய படிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தியாவிற்கு வந்ததும் கோலிவுட்டில் படம் இயக்குவதில் பிஸியாக என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரமாண்டமாக நடந்த நடிகை பூர்ணாவின் வளைகாப்பு..! வைரலாகும் புகைப்படங்கள்..!
மேலும் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து குறும்படம் எடுப்பதில் சஞ்சய் பிஸியாகியுள்ள நிலையில், இவர் குறும்படம் இயக்கும் வீடியோ ஒன்று ஏற்கனவே சமூக வலைதளத்தில் வெளியானதை தொடர்ந்து, தற்போது சில ரீசென்ட் போட்டோஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய்யின் மகன் சஞ்சய், தளபதியுடன்... 'வேட்டைக்காரன்' படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டுமே தோன்றிய நிலையில், அவருடைய மகள் திவ்யா சாஷாவும் 'தெறி' படத்தில் கடைசி காட்சியில் விஜய்யின் மகளாகவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.