மாநாட்டில் குட்டி ஸ்டோரி சொல்லி விஜய் பில்டப் கொடுத்த அந்த பாண்டிய மன்னன் யார்?
தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் நடிகர் விஜய் உரையாற்றியபோது தன் ஸ்டைலில் குட்டி ஸ்டோரி ஒன்றை சொன்னார். அதில் அவர்குறிப்பிட்ட பாண்டிய மன்னன் யார் என்பதை பார்க்கலாம்.
Vijay
தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வந்த விஜய், தற்போது அரசியல் களத்தில் குதித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய அவர், அக்கட்சியின் முதல் மாநில மாநாட்டை இன்று விக்கிரவாண்டியில் நடத்தினார். இதுவரை ஆடியோ லாஞ்சில் மட்டும் அரசியல் பேசி வந்த விஜய், முதன்முறையாக ஒரு முழுநேர அரசியல் தலைவனாக மாறியபின்னர் கலந்துகொண்ட முதல் மாநாடு என்பதால் இதில் விஜய்யின் பேச்சைக் கேட்க லட்சக்கணக்கில் ரசிகர்களும் திரண்டு வந்திருந்தனர்.
TVK Vijay
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விஜய்யின் பேச்சு அனல்பறக்க இருந்தது. வழக்கமாக விஜய், தான் பேசும் மேடைகளில் குட்டி ஸ்டோரி ஒன்றை சொல்வார். அந்த வகையில் இந்த மாநாட்டிலும் ஒரு குட்டி ஸ்டோரி ஒன்றை சொல்லி இருக்கிறார். அந்த ஸ்டோரி என்ன என்பதை பார்க்கலாம்.
Thalapathy Vijay
அவர் பேசியதாவது : “நான் அரசியலுக்கு வந்ததும் சில பேர் கேட்டார்கள். தம்பி உனக்கெல்லாம் என்ன தெரியும்; நீயெல்லாம் எப்படி தாக்குப்பிடிப்ப; இந்த அரசியல் என்பது பெரிய அகலி ஆச்சே, அதுல தண்ணிக்குள்ள முங்கிக்கிட்டு தலையை மட்டும் தூக்கும் ராட்சச முதலைகள் எல்லாம் ரக ரகமா இருக்குமே? இவர்களையெல்லாம் தாண்டி நீ எப்படி கோட்டைக்குள்ள போவ, உன்னால முடியுமா? என கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தாங்க. அவங்களுக்கெல்லாம் நம்ம ஸ்டைல்ல ஒரு குட்டிக்கதை சொல்றேன்.
இதையும் படியுங்கள்... நம்மை ஆளும் கரப்ஷன் கபடதாரிகள் தான் என் எதிரி - திமுகவை அலறவிட்ட விஜய்
TVK Maanaadu
ஒரு நாட்டில் பெரிய போர் வந்ததாம். அப்போது அந்த நாட்டில் பவர்புல்லான தலைவன் இல்லாமல் போனதால், ஒரு சிறுவனிடம் தான் பொறுப்பு இருந்ததாம். அதனால் அந்நாட்டில் இருந்த பெருந்தலைகள் எல்லாம் ரொம்ப பயந்துகொண்டிருந்தார்களாம். அந்த சின்னப்பையன் அந்த நாட்டோட படையை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு போருக்கு செல்லலாம் என சொன்னானாம். அப்போது அங்கிருந்த பெருந்தலைகள் எல்லாம், நீ சின்னப்பையன்; அங்க பவர்புல்லான எதிரிகள் எல்லாம் இருக்கிறார்கள். களத்தில் அவர்களை எதிர்கொள்வதெல்லாம் சாதாரண விஷயமில்ல. உனக்கு படை பலமே இல்லாம நீ எப்படி அந்த போரில் ஜெயிப்ப என்று கேள்வி எழுப்பினார்களாம்.
Vijay Speech
எந்த பதிலும் சொல்லாமல் போருக்கு தனியாக சென்ற பாண்டிய வம்சத்தை சேர்ந்த அந்த சின்ன பையன் என்ன செஞ்சான் தெரியுமா? அதை சங்க இலக்கியத்தில் ரொம்ப தெளிவா சொல்லிருக்காங்க. படிக்காதவங்க படிச்சு தெரிஞ்சுக்கங்க. இல்ல படிச்சவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கங்க. ஆனா கெட்ட பையன் சார் அந்த சின்ன பையன் என்று பில்டப் விட்டு பேசிய விஜய் அந்த பாண்டிய மன்னன் யார் என்பதை சொல்லாமல் சென்றார்.
Vijay Kutty Story
அவர் இவ்வளவு பில்டப் கொடுத்து பேசியது வேறுயாரையுமில்லை. பாண்டிய நாட்டினை மிகவும் சிறிய வயதில் ஆட்சி செய்த நெடுஞ்செழியன் தான். அவரின் வயதை பார்த்து தப்பாக எடைபோட்ட சேர, சோழ மற்றும் கொங்கு நாட்டு குறுநில மன்னர்கள், அந்த சிறுவனிடம் இருந்து பாண்டிய நாட்டை தங்கள் வசப்படுத்த படையெடுத்து வந்தனர். அவர்களையெல்லாம் துணிச்சலுடன் எதிர்த்து போரிட்டு அனைவரையும் தோற்கடித்து அசரவைத்தார் நெடுஞ்செழியன். அவரை தான் தன் குட்டி ஸ்டோரியில் ஒப்பிட்டு பேசி இருக்கிறார் விஜய். தன்னை அரசியலில் குட்டிப்பையனாக நினைக்கும் பலருக்கும் இந்த குட்டி ஸ்டோரி மூலம் ஒரு பாடத்தை புகட்டி இருக்கிறார் விஜய்.
இதையும் படியுங்கள்... "திராவிட மாடல் ஆட்சின்னு ஏமாற்றும் கூட்டம்" நேரடி தாக்குதலை விடுத்த த.வெ.க தலைவர் விஜய்!