"திராவிட மாடல் ஆட்சின்னு ஏமாற்றும் கூட்டம்" நேரடி தாக்குதலை விடுத்த த.வெ.க தலைவர் விஜய்!

TVK Leader Vijay : மக்கள் விரோத ஆட்சியை, திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு ஏமாற்றுபவர்களை நான் எதிர்க்கிறேன் என்று பகிரங்கமாக பேசியிருக்கிறார் தளபதி விஜய்.

TVK leader thalapathy vijay slamed dmk and bjp in speech ans

முதல் முறையாக ஒரு அரசியல் தலைவராக தளபதி விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மாநில மாநாட்டில் சிறப்பாக சிறப்புரை ஆற்றி வருகின்றார். ஊழல் மற்றும் மதவாத அரசியலை எதிர்ப்பது தான் என்னுடைய அரசியல் என்று பேசத் தொடங்கிய தளபதி விஜய், மக்கள் விரோத அரசியலை திராவிட மாடல் என்று கூறி குடும்பமாக ஊழல் செய்து வருபவர்களை நான் எதிர்க்கிறேன் என்று கூறி நேரடியாக முக்கிய அரசியல் கட்சிக்கு சவால் விடுத்திருக்கிறார் தளபதி விஜய் என்று கூறலாம். 

அரசியல் களத்தில் நான் புதியவன் தான், ஆனால் பக்காவாக ஒரு பிளானோடு தான் இப்பொழுது களமிறங்கி இருக்கிறேன். வெறுப்பு அரசியல் என்பது நமக்கு அறவே இருக்க வேண்டாம், பிறருடைய கட்சியை நாம் பின்தொடர வேண்டாம். பெரியார், அண்ணா, காமராஜர் மற்றும் அம்பேத்கர் வகுத்த வழியில் நாம் பயணிப்போம் என்று பேசி இருக்கிறார் தளபதி விஜய். 

நம்மை ஆளும் கரப்ஷன் கபடதாரிகள் தான் என் எதிரி - திமுகவை அலறவிட்ட விஜய்

அது மட்டுமல்லாமல் பெரியாரின் "கடவுள் மறுப்பு கொள்கையை நாம் எப்பொழுதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை", காரணம் "ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்" என்கின்ற கோட்பாடுடன் தான் நாம் செயல்பட இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார். மதவாத அரசியல் நடத்துபவர்களை எதிர்ப்பது கூட எளிது, காரணம் அவர்கள் யானையை போன்றவர்கள், அவர்கள் வருவது நமக்கு கண்ணில் தெளிவாக தெரிந்துவிடும். ஆனால் ஊழல் அரசியல் என்பது நம் கண்ணுக்கு தெரியாத நோயை போல, அவர்களை எதிர்த்து போராடுவதில் தான் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பேசி இருக்கிறார் தளபதி விஜய். 

தொடர்ந்து பேசிய அவர் மக்கள் விரோத அரசியலை நடத்தி விட்டு, அதற்கு திராவிட மாடல் அரசு என்று பெயரிடும் அனைவருக்கும் எதிராக நாம் செயல்பட வேண்டும் என்றும், என் பேச்சிலிருந்து நான் பின்வாங்க போவதில்லை என்று மீண்டும் அதே விஷயத்தை ஆணித்தரமாக கூறி திமுக அரசுக்கு எதிராக அறைகூவல் விடுத்துள்ளார் தளபதி விஜய். இந்த மிகப்பெரிய அரசியல் களத்தில் ஒரு சிறுவனாக நான் களமிறங்குகிறேன் என்று பலர் என்னை கிண்டலும் கேலியும் செய்யட்டும், நான் திரைத்துறைக்கு அறிமுகமான புதிதிலும் கூட என்னை அப்படித்தான் சொன்னார்கள். 

கூத்தாடி அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார் என்று தான் அனைவரும் கேட்டார்கள். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை எம்.ஜி.ஆரும் ஆந்திராவில் என் டி ஆர் சினிமாவில் இருந்து தான் மக்கள் போற்றும் அரசியல் தலைவர்கள் ஆக மாறினார்கள். நாமும் அதுபோல மாறலாம் என்று துடிப்போடு பேசி இருக்கிறார் தளபதி விஜய்.

பிளவுவாத அரசியல் சித்தாந்தத்தை எதிர்க்கும் தளபதி விஜய்யின் அரசியல் கொள்கை, கோட்பாடு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios