வாரிசு படத்தின் வெற்றியை சிம்பிளாக கொண்டாடிய விஜய்... வைரலாகும் சக்சஸ் மீட் போட்டோஸ்
வாரிசு திரைப்படத்தின் வெற்றியை நடிகர் விஜய், ஐதராபாத்தில் படக்குழுவினருடன் சேர்ந்து கேக் வெட்டி சிம்பிளாக கொண்டாடி உள்ளார்.
நடிகர் விஜய் நடித்த 66-வது படம் வாரிசு. கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கிய வம்சி பைடிபல்லி தான் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் மூலம் கோலிவுட்டில் தயாரிப்பாளராக அறிமுகமானார் தில் ராஜு. தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் அவர், தமிழில் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படம் கடந்த ஜனவரி 11-ந் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸ் ஆனது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். மேலும் சரத்குமார், யோகிபாபு, பிரபு, எஸ்.ஜே.சூர்யா, ஜெயசுதா, கணேஷ் வெங்கட்ராமன், பிரகாஷ் ராஜ், ஷியாம், சங்கீதா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, விடிவி கணேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு தமன் இசையமைத்து இருந்தார். நடிகர் விஜய்யின் படத்துக்கு அவர் இசையமைப்பது இதுவே முதன் முறை ஆகும்.
இதையும் படியுங்கள்... செதுக்கி வைத்த சிலை போல்... ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு... ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் அசர வைத்த மாளவிகா மோகனன்!
ரிலீஸ் ஆனது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் வாரிசு திரைப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்து வருகிறது. அதன்படி வெளியான 7 நாட்களில் இப்படம் 210 கோடிக்கு மேல் வசூலித்து இருந்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருவதால் விரைவில் 300 கோடி கிளப்பிலும் இப்படம் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் வெற்றியை நடிகர் விஜய், படக்குழுவினருடன் சேர்ந்து சிம்பிளாக கொண்டாடி உள்ளார். ஐதராபாத்தில் வாரிசு படத்தின் சக்சஸ் பார்ட்டி நடைபெற்று உள்ளது.
இதில் நடிகர் விஜய், இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் விவேக், நடிகர் ஷியாம் ஆகியோர் கலந்துகொண்டனர். வாரிசு படத்தின் சக்சஸ் பார்ட்டியின் போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... சமூக சேவைக்காக ஸ்ருதி ஹாசனுக்கு இந்திய சாதனையாளர் விருது!