சமூக சேவையில் ஈடுபட்டு நாட்டிற்காக தங்களை அர்ப்பணிப்பு செய்தவர்களின் முயற்சியை பாராட்டும் வகையில் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு பவர் காரிடர்ஸ் இந்திய சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். பின்னணி பாடகி, இசையமைப்பாளர், நடிகை என்று பல திறமைகளை கொண்டுள்ளார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் உருவான லாபம் படம் வெளியாகிருந்தது. தற்போது வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரைய்யா, சலார், The Eye ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து ஸ்ருதி ஹாசன் தற்போது இங்கிலிஸ் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். 

மும்பையில் காதலனுடன் கைகளைப் பிடித்தபடி சுற்றும் ஸ்ருதி ஹாசன்... இணையத்தில் தீயாய் பரவு புகைப்படம்!!

இந்த நிலையில் தான் விஞ்ஞான பவனில் வைத்து ஸ்ருதி ஹாசனுக்கு பிசி எனப்படும் பவர் காரிடர்ஸ் இந்திய சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வழங்கியுள்ளார். நாட்டிற்கு சேவை செய்ய முன் வந்தவர்களின் முயற்சி மற்றும் அவர்களது அர்ப்பணிப்பை பாராட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பவர் காரிடர்ஸ் இந்திய சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அந்த விருது ஸ்ருதி ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

டபுள் சந்தோஷத்தில் கமல் மகள்... ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறி ஸ்ருதிஹாசன் நடத்திய வேறலெவல் போட்டோஷூட் வைரல்

இது குறித்து ஸ்ருதி ஹாசன் கூறுகையில், இது போன்ற சேவைகளை செய்வதற்கு சினிமா துறையை பயன்படுத்த வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருது வாங்கியதில் மகிழ்ச்சி. கலைப் பணிக்கு பாராட்டு பெறுவது என்பது எப்போதும் பணிவான ஒன்று தான். அதற்காக நான் நன்றியுள்ளவளாக இருப்பேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


செதுக்கி வைத்த சிலை போல்... ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு... ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் அசர வைத்த மாளவிகா மோகனன்!

இது தொடர்பாக WWF India தங்களது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிசி எனப்படும் பவர் காரிடர்ஸ் இந்திய சாதனையாளர் விருது பெற்றதற்கு ஸ்ருதி ஹாசனுக்கு வாழ்த்துக்கள். சமூக காரணங்களுக்காக அவர் கொண்டிருந்த ஆர்வம் எங்களுடனான எங்களது தொடர்பை பெருமைப்படுத்துகிறது என்று டபிள்யூ டபிள்யூ எஃப் இந்தியா அமைப்பு கூறியுள்ளது. இந்த அமைப்பின் பிராண்ட் அம்பாசிடராக ஸ்ருதி ஹாசன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…

Scroll to load tweet…