தமிழகத்தில் மட்டும் லேட்டாக ரிலீசாகும் பொன்னியின் செல்வன் 2... ரெட் ஜெயண்ட் வெளியிட்டும் இந்த நிலைமையா?
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் 2-ம் பாகம் தமிழகத்தில் மட்டும் லேட்டாக ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, பார்த்திபன், சரத்குமார், சோபிதா, விக்ரம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீசாக உள்ளது.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, அதற்கான வேலைகளையும் படக்குழு மும்முரமாக செய்து வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ரிலீசானபோது அதன் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. இந்தப்படத்துக்கு தான் அதிகாலை காட்சிக்கே குடும்பம் குடும்பமாக வந்து பார்த்த நிகழ்வுகளும் நடந்தன.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஷாக்கிங் தகவல் என்னவென்றால் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் தமிழ்நாட்டில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு ரிலீஸ் ஆகாது என்பது தான். பொன்னியின் செல்வன் 2 படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. இதன்காரணமாக இப்படத்தின் முதல் காட்சி மிகவும் லேட்டாகவே தமிழகத்தில் திரையிடப்பட உள்ளது. காலை 9 மணிக்கு தான் பொன்னியின் செல்வன் 2 FDFS இருக்கும் என தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்கள்... சூப்பர்ஸ்டார்னு சொன்ன ரசிகர்.... அஜித் கொடுத்த அல்டிமேட் ரியாக்ஷன் - வைரலாகும் ஏகேவின் செல்பி வீடியோ
அரசு அனுமதியை மீறி திரையரங்குகள் சிறப்பு காட்சிகளை திரையிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு சுற்றரிக்கை அனுப்பி உள்ளதாம். இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தான் தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது. அப்படி இருந்தும் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பொன்னியின் செல்வன் 2 படத்தின் வசூலும் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
இதற்கு காரணம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு துணிவு மற்றும் வாரிசு படங்கள் ஒன்றாக ரிலீசான போது அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்ட போது கொண்டாட்டம் என்கிற பெயரில் ஓவராக ஆட்டம் போட்டு அஜித் ரசிகர் ஒருவர் உயிரிழந்தார். அதனால் தான் தற்போது எந்த படத்திற்கும் தமிழக அரசு அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிப்பதில்லை என கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் காட்சி தமிழகத்தில் 9 மணிக்கு திரையிடப்பட்டாலும், மற்ற மாநிலங்களில் இப்படம் திட்டமிட்டபடி 4 மணிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக கேரளாவில் இப்படத்தின் 4 மணி காட்சிக்கான டிக்கெட் முன்பதிவு தற்போதே புக் ஆகிவிட்டது. அந்த அளவுக்கு இப்படத்திற்கு இந்தியா முழுவதிலும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் 2-வில் இப்படி ஒரு காமெடி காட்சியா? வந்தியத்தேவன் - நம்பி காம்போவின் கலக்கல் வீடியோ இதோ