சூப்பர்ஸ்டார்னு சொன்ன ரசிகர்.... அஜித் கொடுத்த அல்டிமேட் ரியாக்ஷன் - வைரலாகும் ஏகேவின் செல்பி வீடியோ
நேபாளத்தில் பைக் ரைடிங் செய்து வரும் நடிகர் அஜித்தை சூப்பர்ஸ்டார் என புகழ்ந்து பேசி ரசிகர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் உலக சுற்றுலாவை மேற்கொண்டு வருகிறார். அவர் இந்த மாத இறுதிவரை நேபாளத்தில் பைக் ரைடு செய்ய திட்டமிட்டு உள்ளார். அதன்பின் இந்தியா திரும்ப உள்ள அஜித், மகிழ் திருமேனி இயக்க உள்ள ஏகே 62 படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார். அப்படத்தின் ஷூட்டிங் மே மாதம் தொடங்க உள்ளது. அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது.
நடிகர் அஜித் பெரும்பாலும் மீடியா வெளிச்சத்தை விரும்பாதவர். இதனால் தான் இவர் எந்தவித பேட்டிகளையும் கொடுப்பதில்லை. அப்படி இருந்தாலும், ரசிகர்கள் அவர் மீது காட்டும் அன்பு என்பது குறைந்தபாடில்லை. அந்த அன்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் செல்கிறது. தற்போது நடிகர் அஜித் நேபாளத்தில் தனது பைக் சுற்றுலாவை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு அங்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது இந்த பைக் டிரிப் மூலம் தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் 2-வில் இப்படி ஒரு காமெடி காட்சியா? வந்தியத்தேவன் - நம்பி காம்போவின் கலக்கல் வீடியோ இதோ
நடிகர் அஜித் நேபாளத்தில் செல்லும் இடமெல்லாம் அவரை அடையாளம் கண்டு அவருடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்கள் எடுத்து வருகின்றனர். ரசிகர்களின் இந்த அன்பால் திளைத்துப்போன அஜித், சளிக்காமல் அவர்களுக்கு தன் அன்பை பொழிந்து வருகிறார். அந்த வகையில் நேபாளத்தில் உள்ள அஜித்தின் ரசிகர் ஒருவர், அஜித்துடன் செல்பி வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பேசியுள்ள அந்த நபர் வட இந்தியாவை சேர்ந்தவர் போல தெரிகிறது. நேபாளத்தில் லாரி ஓட்டி வரும் அவர், அங்கு அஜித்தை பார்த்த உடன் அவருடன் செல்பி வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் அஜித்தை அவர் தென்னிந்தியாவின் சூப்பர்ஸ்டார் என புகழ்ந்துள்ளார். இதற்கு அஜித்தும் தலையாட்டியபடி செல்வது அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளது.
இதையும் படியுங்கள்... நடிகர் சரத்பாபுக்கு செப்சிஸ் பாதிப்பு.. இந்த நோயின் அறிகுறிகள் என்னென்ன? செப்சிஸ் வந்தால் என்னாகும் தெரியுமா?