இது தான் உங்கள் பிறந்த நாள் பரிசு..! இந்திய அளவில் #SooraraiPottru ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!
68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 'சூரரைப்போற்று' திரைப்படம் ஐந்து பெற்றுள்ளது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் #SooraraiPottru ஹேஷ் டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
soorarai pottru
ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் 'சூரரைப் போற்று'. இயக்குனர் சுதா கங்கோர இயக்கத்தில், நடிகர் சூர்யா இந்த படத்தை தயாரித்து, நடித்திருந்தார். சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை அபர்ணா பால முரளி நடித்திருந்தார். மேலும் ஊர்வசி, காளி வெங்கட், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இப்படம், ஒருவேளை திரையரங்கில் வெளியாகி இருந்தால் வேற லெவலுக்கு வசூல் சாதனை படைத்திருக்கும் என்பதே ரசிகர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்களின் கருத்தாக இருந்தது. இந்த படத்திற்கு மகுடம் சூட்டும் வகையில் இப்படம் ஐந்து தேசிய விருதுகளை வாங்கி குவித்துள்ளது.
மேலும் செய்திகள்: சூரரை போற்று படத்தை தொடர்ந்து தேசிய விருதை அள்ளிய மண்டேலா மற்றும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்!
சிறந்த படத்திற்கான விருது, நடிகருக்கான விருது சூர்யாவுக்கும், சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கும், சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கும், பிறந்த திரைக்கான விருது என மொத்தம் ஐந்து விருதுகளை பெற்றுள்ளது. இதனை சூர்யாவின் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்: ஷேம்.. ஷேம்... பாத்ரூமில் குளித்துக்கொண்டே போஸ் கொடுத்த மியா கலிஃபா..! கவர்ச்சியை அள்ளிக்கொட்டிய போட்டோஸ்!
குறிப்பாக சூரரைப் போற்று ஹேஷ் டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் நாளை சூர்யாவின் 47 வது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், சூர்யாவிற்கு கிடைத்துள்ள தேசிய விருது தான் மிகப்பெரிய பிறந்தநாள் பரிசு என அவரது ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை இப்போது தெரிவிக்க துவங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: எப்போதும் காப்பாய் காமாட்சி... ஆடி வெள்ளியில் விளக்கு போட்டு உருகி உருகி வேண்டிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!