Asianet News TamilAsianet News Tamil

சூரரை போற்று படத்தை தொடர்ந்து தேசிய விருதை அள்ளிய மண்டேலா மற்றும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்!

சூர்யாவின் 'சூரரை போற்று' திரைப்படம் 5 தேசிய விருதுகளை பெற்ற நிலையில், 'மண்டேலா' திரைப்படம் 2 தேசிய விருதையும், 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம் 3 விருதுகளையும் பெற்றுள்ளது.
 

mandela and sivaranjaniyum innum sila pengalum got 5 national award
Author
Chennai, First Published Jul 22, 2022, 5:33 PM IST


68 ஆவது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் யோகி பாபு நடித்த 'மண்டேலா' திரைப்படம் இரண்டு விருதுகளையும் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளியான 'சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம் மூன்று விருதுகளையும் வாங்கியுள்ளது.

திரையுலகினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான தேசிய விருதுகள் இன்று புது தில்லியில் உள்ள தேசிய விருது மையத்தை அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது தேசிய விருதுகளை பெறும் படங்கள் மற்றும் பிரபலங்களின் பட்டியல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் சுதா கங்கோரா இயக்கத்தில் வெளியான 'சூரரை போற்று' திரைப்படம் சிறந்த பின்னணி, இசை, சிறந்த ஸ்கிரீன் ப்ளே, சிறந்த வசனம், சிறந்த நடிகை, சிறந்த நடிகர், ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் விருதுகளை வாங்கி குவித்துள்ளது.

mandela and sivaranjaniyum innum sila pengalum got 5 national award

இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நடிகர் யோகி பாபு மற்றும் ஷீலா ராஜ்குமார் நடிப்பில் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான மண்டேலா திரைப்படம், சிறந்த வசனத்திற்கான விருதையும், சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது என இரண்டு விருதுகளை இப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வினுக்கு வாங்கி கொடுத்துள்ளது.

mandela and sivaranjaniyum innum sila pengalum got 5 national award

அதே போல் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான 'சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம் மூன்று விருதுகளை அள்ளி உள்ளது. சிறந்த தமிழ் படமாக சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த படத்தொகுப்புக்கான விருதையும் (ஸ்ரீகர் பிரசாத் )பெறுகிறார், அதே போல்  சிறந்த துணை நடிகைக்கான விருதை (லட்சுமி பிரியா) பெற உள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios