முன்பதிவிலேயே குட் பேட் அக்லி சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய ரெட்ரோ!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் மே 1ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் முன்பதிவு வசூல் நிலவரங்களை பார்க்கலாம்.

Retro Movie Pre Booking Collection : கங்குவா படத்தின் தோல்விக்கு பின்னர் கம்பேக் கொடுக்கும் முனைப்போடு நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இதில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற மே 1ந் தேதி உழைப்பாளர் தினத்தன்று திரைக்கு வர உள்ளது.
Retro
ரெட்ரோ பட டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
ரெட்ரோ படத்தின் கேங்ஸ்டராக நடித்துள்ளார் சூர்யா. இது பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் ஆக உள்ளதால் இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ரெட்ரோ திரைப்படத்தை சூர்யா - ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்து உள்ளது. ரெட்ரோ திரைப்படத்திற்கான முன்பதிவு ஏப்ரல் 27-ந் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய வேகத்தில் ஏராளமான முன்பதிவு செய்ததால் சர்வரே கிராஷ் ஆனது. இதனால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு சிறிது நேரம் புக்கிங் நிறுத்திவைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... ரெட்ரோ சூர்யாவிற்காக எழுதப்பட்ட கதையே கிடையாது - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!
Retro Suriya
முன்பதிவில் மாஸ் காட்டும் ரெட்ரோ
இதையடுத்து மீண்டும் அது சரிசெய்யப்பட்டு, புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புக்கிங் தொடங்கி இன்னும் 24 மணிநேரம் கூட ஆகவில்லை. அதற்குள் தமிழ்நாட்டில் மட்டும் முன்பதிவு மூலம் ரெட்ரோ திரைப்படம் ரூ.5 கோடி வசூலித்துள்ளது. சூர்யா கெரியரில் இதுவரை அவர் நடித்த எந்த படங்களும் இவ்வளவு வேகமாக 5 கோடி வசூலை எட்டியது இல்லை. அதுமட்டுமின்றி மே 1ந் தேதி விடுமுறை என்பதால், முதல் ஷோ மட்டுமின்றி மதிய ஷோ, ஈவினிங் ஷோ என அனைத்து ஷோக்களும் படிப்படியாக ஹவுஸ் புல் ஆகி வருகின்றன.
Retro Pre Booking Record
குட் பேட் அக்லி சாதனையை தகர்த்த ரெட்ரோ
புக் மை ஷோ ஆப்பில் டிக்கெட் விற்பனை தொடங்கிய 24 மணிநேரத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கு 57 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகி இருந்தன. ஆனால் ரெட்ரோ பட டிக்கெட் விற்பனை தொடங்கி இன்னும் ஒரு நாள் கூட ஆகவில்லை, அதற்குள் அப்படத்திற்கு 82 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகி உள்ளது. இதன்மூலம் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. மே 1ந் தேதி ரெட்ரோ படம் வசூல் சாதனை நிகழ்த்த காத்திருக்கிறது.
இதையும் படியுங்கள்... வெயிட்டிங் லிஸ்ட்டில் வாடிவாசல்; அடுத்த படம் யாருடன்? அதிகாரப்பூர்வமாக அறிவித்த சூர்யா