தியேட்டரில் கூட்டமில்லை; ஓடிடிக்கு பார்சல் செய்து அனுப்பப்பட்ட ரெட்ரோ - எப்போ ரிலீஸ்?
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

Retro OTT Release Date
சூர்யாவின் 44வது திரைப்படமான ரெட்ரோவை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்தை 2டி நிறுவனம் சார்பாக சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்து இருந்தனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். அவர் இசையில் பாடல்கள் அனைத்தும் ரிலீசுக்கு முன்பே வேறலெவல் ஹிட் ஆனது.
ரெட்ரோ மூலம் ஹிட் கொடுத்தாரா சூர்யா?
ரெட்ரோ படத்துக்கு முன்னதாக நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கு வந்தது. இப்படம் படுதோல்வியை சந்தித்ததால், ரெட்ரோ படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு இருந்தார் சூர்யா. அவர் எதிர்பார்த்ததைப் போல் ரெட்ரோ படம் திரையரங்குகளில் வசூல் வேட்டையாடி சூர்யாவுக்கு கம்பேக் படமாக அமைந்தது. ஆனால் இப்படம் விமர்சன ரீதியாக பெரியளவில் வரவேற்பை பெறவில்லை.
ரெட்ரோ படத்தின் வசூல்
ரெட்ரோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான ஒரே வாரத்தில் உலகளவில் ரூ.100 கோடி வசூலை எட்டியது. இதன்மூலம் நடிகர் சூர்யாவின் கெரியரில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் ரெட்ரோ படைத்துள்ளது. மேலும் இப்படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் இருந்து 10 கோடி ரூபாயை அகரம் பவுண்டேஷனுக்கு வழங்கினார் சூர்யா. அந்த தொகையை அதில் படிக்கும் ஏராளமான ஏழை எளிய மாணவர்களின் படிப்புக்காக பயன்படுத்த உள்ளனர்.
ரெட்ரோ ஓடிடி ரிலீஸ்
ரெட்ரோ படம் முதல் வாரம் பட்டைய கிளப்பினாலும், இரண்டாவது வாரம் படிப்படியாக வாஷ் அவுட் ஆனது. அதற்கு போட்டியாக வந்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் தான் தற்போது சக்கைப்போடு போட்டு வருகிறது. இதனால் ரெட்ரோ திரைப்படம் தற்போது ஓடிடிக்கு பார்சல் செய்து அனுப்பப்பட்டு உள்ளதாம். அதன்படி ரெட்ரோ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றி உள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் அப்படத்தை ஜூன் 5ந் தேதி ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாம்.