MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Karuppu பட பர்ஸ்ட் ஷோ ரத்து... சூர்யா ரசிகர்களுக்கு இடியை இறக்கிய தயாரிப்பாளர் - காரணம் என்ன?

Karuppu பட பர்ஸ்ட் ஷோ ரத்து... சூர்யா ரசிகர்களுக்கு இடியை இறக்கிய தயாரிப்பாளர் - காரணம் என்ன?

Karuppu Morning Shows Cancelled : ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள கருப்பு திரைப்படத்தின் காலை 9 மணி சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : May 14 2026, 08:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Karuppu Morning Shows Cancelled
Image Credit : Instagram

Karuppu Morning Shows Cancelled

'கருப்பு' படத்தை ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யா, த்ரிஷாவுடன் இந்திரன்ஸ், நட்டி, ஸ்வாசிகா, சிவதா, அனகா மாயா ரவி மற்றும் சுப்ரீத் ரெட்டி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படம் மே 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான புரமோஷன் பணிகளையும் படக்குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டு வந்தனர். இப்படத்திற்கு காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடவும் முதல்வர் விஜய் அனுமதி அளித்திருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
கருப்பு பட 9 மணி காட்சி ரத்து
Image Credit : X

கருப்பு பட 9 மணி காட்சி ரத்து

கருப்பு திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, நள்ளிரவில் ட்வீட் ஒன்றை போட்டார். அதில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் கருப்பு திரைப்படத்தின் காலை 9 மணிக்காட்சி ரத்து செய்யப்படுகிறது என பதிவிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் மனமுடைந்து போயினர். இந்த தாமதத்திற்கு காரணம் பைனான்ஸ் பிரச்சனை தானாம்.

Related Articles

Related image1
Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?
Related image2
Karuppu : சூர்யா முதல் த்ரிஷா வரை... கருப்பு படத்தில் நடிக்க வாரி வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?
34
கருப்பு படம் தாமதம் ஆவது ஏன்?
Image Credit : Think Music India

கருப்பு படம் தாமதம் ஆவது ஏன்?

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ஜஸ்வந்த் பண்டாரி என்பவருக்கு பணம் கொடுக்க வேண்டி இருந்ததாம். அதனை கொடுப்பதில் இழுபறி நீடிப்பதால் தான் கருப்பு படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளிலும் இப்படத்தின் காட்சிகள் இன்று முழுவதும் கேன்சல் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் கருப்பு திரைப்படம் இன்று ரிலீஸ் ஆவது டவுட் தான் என்கிற பேச்சு எழுந்து வருகிறது.

44
அப்செட்டில் ரசிகர்கள்
Image Credit : youtube

அப்செட்டில் ரசிகர்கள்

கருப்பு திரைப்படத்திற்காக ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு அப்படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்ட தகவல் பேரிடியாக அமைந்துள்ளது. இதனால் படக்குழுவை கடுமையாக சாடி வருகின்றனர். தயவு செஞ்சு சொந்த பேனரில் படம் பண்ணாதீர்கள் என்றும் சூர்யாவுக்கு வலியுறுத்தி வருகிறார்கள்.

சமீபத்தில், 'கருப்பு' படத்தின் ட்ரெய்லரையும் படக்குழு வெளியிட்டது. இது ஒரு ஆக்‌ஷன் நிறைந்த கோர்ட் ரூம் டிராமா என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. நீதிக்காகப் போராடி, பல ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலையும் ஒரு முதியவர் மற்றும் அவரது பேத்தியின் உருக்கமான கதையுடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. அவர்களுக்காக வாதாடும் வழக்கறிஞராக த்ரிஷா கிருஷ்ணன் நடிக்கிறார். அவருக்கு எதிராக ஆர் ஜே பாலாஜியின் கதாபாத்திரம் வாதாடுவது போல் தெரிகிறது. மோதல் வலுக்கும்போது, நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் போராடும் ஒரு அச்சமற்ற மனிதராக சூர்யாவின் கதாபாத்திரம் களமிறங்குகிறது. ட்ரெய்லரில் உணர்ச்சிகரமான காட்சிகள், ஆக்‌ஷன் மற்றும் பவர்ஃபுல்லான வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா
சூர்யா 45

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?
Recommended image2
Now Playing
Sunny Leone Net Worth | அடேங்கப்பா கிளாமர் குயின் சன்னி லியோன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Recommended image3
Now Playing
CM Vijay : நடிகராக 275 கோடி சம்பளம் வாங்கிய விஜய்; முதல்வராக வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Related Stories
Recommended image1
Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?
Recommended image2
Karuppu : சூர்யா முதல் த்ரிஷா வரை... கருப்பு படத்தில் நடிக்க வாரி வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved