MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Karuppu : சூர்யா முதல் த்ரிஷா வரை... கருப்பு படத்தில் நடிக்க வாரி வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Karuppu : சூர்யா முதல் த்ரிஷா வரை... கருப்பு படத்தில் நடிக்க வாரி வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Karuppu Movie Salary : ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்துள்ள கருப்பு திரைப்படம் மே 14ந் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், அதில் நடித்தவர்களின் சம்பளம் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 13 2026, 11:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Karuppu Movie Salary Details
Image Credit : X

Karuppu Movie Salary Details

நடிகர் சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ள முதல் படம் கருப்பு. இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி உள்ளார். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி இதில் வில்லனாகவும் நடித்துள்ளார். அவர் வில்லனாக நடித்துள்ள முதல் படம் இதுவாகும். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இப்படத்தில் சூர்யா உடன் நட்டி நட்ராஜ், மலையாள நடிகர் இந்திரன்ஸ், நடிகை சுவாசிகா, நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கருப்பு ரிலீஸ்
Image Credit : instagram/Suriya Sivakumar

கருப்பு ரிலீஸ்

கருப்பு திரைப்படம் கடந்த ஆண்டே ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் அப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ச்சியாக தள்ளிவைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து இறுதியாக மே 14ந் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் அவர் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கிய முதல் படம் கருப்பு தான். இதற்காக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து படக்குழுவினர் போஸ்டரையும் வெளியிட்டனர்.

35
சூர்யா சம்பளம்
Image Credit : X

சூர்யா சம்பளம்

கருப்பு திரைப்படத்தில் நடிகர் சூர்யா வக்கீல் ஆக நடித்திருக்கிறார். இப்படத்தின் வெற்றியை மலைபோல் நம்பி இருக்கிறார் சூர்யா. ஏனெனில் அவருக்கு பிளாக்பஸ்டர் வெற்றி கிடைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு ரூ.45 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது. தன்னுடைய கெரியரில் அவர் வாங்கிய அதிக சம்பளமாகவும் இது கருதப்படுகிறது. இப்படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று வக்கீல் சரவணன், மற்றொன்று கடவுள் கருப்பசாமியாக நடித்துள்ளாராம்.

45
த்ரிஷா மற்றும் ஆர்ஜே பாலாஜி சம்பளம்
Image Credit : X

த்ரிஷா மற்றும் ஆர்ஜே பாலாஜி சம்பளம்

கருப்பு படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார். அவர் ப்ரீத்தி என்கிற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார். இப்படத்தில் நடிக்க நடிகை த்ரிஷாவுக்கு ரூ.5 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் இப்படத்தை இயக்கி, அதில் வில்லனாகவும் நடித்துள்ள ஆர்.ஜே.பாலாஜிக்கு ரூ.2 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். அவர் இப்படத்தில் பேபி குமார் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

55
மற்ற நடிகர்களின் சம்பளம்
Image Credit : youtube

மற்ற நடிகர்களின் சம்பளம்

அதேபோல் நடிகர் நட்டி நட்ராஜுக்கு ரூ.1.5 கோடியும், மலையாள நடிகர் இந்திரன்ஸுக்கு ரூ.80 லட்சமும், நடிகை சுவாசிகாவுக்கு ரூ. 40 லட்சமும் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வருகிற மே 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படம் சூர்யாவுக்கு பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா
திரிஷா
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Related Stories
Recommended image1
ஏ.ஆர்.ரகுமான் விலகல் முதல் விஜயால் செய்த மாற்றம் வரை... ஆர்.ஜே.பாலாஜி உடைத்த கருப்பு பட சீக்ரெட்ஸ்
Recommended image2
கருப்பு ஆடியோ லாஞ்ச் ஹைலைட்ஸ்... சூர்யா முதல் RJB வரை பிரபலங்கள் பேசியதென்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved