MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கருப்பு ஆடியோ லாஞ்ச் ஹைலைட்ஸ்... சூர்யா முதல் RJB வரை பிரபலங்கள் பேசியதென்ன?

கருப்பு ஆடியோ லாஞ்ச் ஹைலைட்ஸ்... சூர்யா முதல் RJB வரை பிரபலங்கள் பேசியதென்ன?

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்ற நிலையில், அதில் பிரபலங்கள் என்னென்ன பேசினார்கள் என்பதை பார்க்கலாம்.

5 Min read
Author : Ganesh A
Published : Apr 27 2026, 08:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Suriya Speech in Karuppu Audio Launch
Image Credit : X

Suriya Speech in Karuppu Audio Launch

கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடந்தது. அதில் நடிகர் சூர்யா பேசியதாவது : “கருப்பசாமி கடவுள் தான் இந்தப் படத்தை இந்தத் தூரம் கொண்டு வந்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். கடவுளின் அருள் ஒருவருக்குக் கிடைத்தால் என்ன நடக்கும் என்பதை நான் கண் கூடாகப் பார்க்கிறேன்.

​RJB ஒரு பன்முகத் திறமைசாலி. நான் என்னை வெறும் 'சூர்யா'வாக மட்டும் பார்க்கிறேன், ஆனால் அவர் தன்னை ஒரு இயக்குநர், நடிகர், கமெண்டேட்டர் எனப் பல அவதாரங்களில் செதுக்கிக் கொள்கிறார். சில ரசிகர்கள் பழைய விஷயங்களைப் பேசலாம், ஆனால் RJB-ன் திறமை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கை தான் இந்த அதிசயத்தை நிகழ்த்தும்.

எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்து, என்னை இந்தப் படத்தில் செதுக்கிய இயக்குநர் RJB-க்கு பெரிய நன்றிகள்! ​"படம் பார்த்தவர்கள் முதல் பாதி மிகவும் எமோஷனலாகவும், இரண்டாம் பாதி அதிரடியான தியேட்டர் மொமெண்ட்ஸ் நிறைந்தும் இருப்பதாகச் சொல்கிறார்கள். மே 14 - இனி எல்லாம் உங்கள் கையில் தான். நிச்சயமாக இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என தெரிவித்தார்.

29
சூர்யா பாராட்டு
Image Credit : X

சூர்யா பாராட்டு

ஆடியோ வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் சாய் அபயங்கரை உச்சி முகர்ந்த சூர்யா: ​"சாய், நீ ஒரு மிகச்சிறந்த திறமைசாலி. உனக்கு ஒரு பிரம்மாண்டமான எதிர்காலம் காத்திருக்கிறது!" ​"நான் அவரை முதலில் சந்தித்தபோது, ஒரு நாளைக்கு 1000 டியூன்ஸ் வரை போடுவேன் என்றார். படம் திரைக்கு வரும்போது, இசையமைப்பில் அது ஒரு மாஸான அனுபவமாக இருக்கும். அவர் ஒரு இசை அரக்கன் என பாராட்டினார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் ஒரு பிரம்மாண்டமான தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள். இந்தப் படத்திற்கான உலகத்தை மிகச்சிறப்பாக உருவாக்கியுள்ளனர்." "அன்பறிவ் மற்றும் விக்ரம் மாஸ்டர்களுக்குப் பெரிய நன்றிகள். படத்தில் அவர்களின் ஸ்டண்ட் காட்சிகள் மிரட்டலாக வந்திருக்கிறது.

நடிகர் இந்திரன்ஸ் ஒரு மிகப்பெரிய திறமைசாலி. தொடர்ந்து பல வித்தியாசமான கதைகளில் நடித்துக்கொண்டே இருக்கிறார். அவரைப் பார்ப்பது மிகவும் ஊக்கமளிக்கிறது. அவர் நான்காம் வகுப்பு வரைதான் படித்திருந்தார், ஆனால் இப்போது தனது விடாமுயற்சியால் 7-ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதியுள்ளார். அவரது அர்ப்பணிப்புக்கு எல்லையே இல்லை என சூர்யா பேசினார்.

Related Articles

Related image1
‘கருப்பு’க்கு முன் மே மாதத்தில் ரிலீஸ் ஆன சூர்யா படங்களும்... அதன் ரிசல்டும் ஒரு பார்வை
Related image2
ஏ.ஆர்.ரகுமான் விலகல் முதல் விஜயால் செய்த மாற்றம் வரை... ஆர்.ஜே.பாலாஜி உடைத்த கருப்பு பட சீக்ரெட்ஸ்
39
ஆர்.ஜே.பாலாஜி ஸ்பீச்
Image Credit : X

ஆர்.ஜே.பாலாஜி ஸ்பீச்

ஆர்.ஜே.பாலாஜி பேசியதாவது : வலிமை அப்டேட்டிற்குப் பிறகு அதிகமாகக் கேட்கப்பட்டது Karuppu அப்டேட் தான். இதற்காக முதலில் அடி வாங்கியது தயாரிப்பாளர் SR பிரபு தான். ரசிகர்கள் அவரைத் தான் டார்கெட் செய்தார்கள்." கடந்த 2 வருடப் பயணம் மிகக் கடினமானது. பல எதிர்பாராத மாற்றங்கள் நடந்தன. ஆனால் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்து எனக்கு முழு ஆதரவு அளித்தனர். நானும் SR பிரபுவும் நிறைய சண்டையிட்டோம், விவாதித்தோம். ஆனால் இன்று நாங்கள் ஒரு குடும்பமாகிவிட்டோம். இந்தப் படத்திற்காக எனது 100% உழைப்பைக் கொடுத்துள்ளேன். ஏன் போஸ்டரில் தேதி போடவில்லை என ரசிகர்கள் கேட்கிறார்கள். தேதி போட்டால் சென்சார் போர்டு ஒரு குத்து குத்துறாங்க. அதான் தள்ளிப்போனது. சீக்கிரம் அதிகாரப்பூர்வமாகப் போடுவோம். ஆனா ஒன்னு.. பட்டாசு எடுத்து வைங்க, பண்டிகை வரப்போகுது.

32 மாத உழைப்பு, 5 பேர் கொண்ட குழுவின் எழுத்து.. இது எல்லாம் சாத்தியமானது சூர்யா சார் ஒருவரால் தான்! வெறும் 45 நிமிடம் கதை கேட்டார், உடனே ஓகே சொன்னார். என் மனைவியே நம்பாமல் ஆச்சரியப்பட்டார். வழக்கமாக பெரிய ஹீரோக்கள் எல்லா காட்சிகளிலும் தாங்கள் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், இதில் அவர் இல்லாத பல முக்கிய காட்சிகள் உண்டு. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் அதற்குச் சம்மதித்தார். திரையில் அவரது கண்கள் பேசும் வித்தையே தனி! கமர்ஷியல் முதல் பாதி.. இரண்டாம் பாதியோ ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு 'High'கொடுக்கும்.

49
பாராட்டிய ஆர்.ஜே.பாலாஜி
Image Credit : X

பாராட்டிய ஆர்.ஜே.பாலாஜி

ஒரு பெரிய நட்சத்திரத்தையும், பெரிய படத்தையும் எப்படி கையாள வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் தடுமாறிய போது என் கையைப் பிடித்து வழிநடத்தியவர் GK விஷ்ணு. ஒரு ஹீரோவை எவ்வளவு மாஸாகக் காட்ட வேண்டும் என்ற ரகசியம் அவருக்கு அத்துப்படி. GK விஷ்ணுவின் கேமரா மேஜிக் இந்தப் படத்தில் வேற லெவலில் இருக்கும்.

நடிகர் இந்திரன்ஸ் இந்தப் படத்தில் ஒரு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது பெர்பார்மன்ஸ் என்னை ஆச்சரியப்படுத்தியது. திரிஷாவால் இன்று வர முடியவில்லை, ஆனால் அவருக்குப் பெரிய நன்றிகள். 23 ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பது சாதாரண விஷயமல்ல. அது 'திரிஷா' என்பதால் மட்டுமே சாத்தியம்! சமீப காலங்களில் அவர் நடித்ததில், இது மிகச்சிறந்த கதாபாத்திரமாக இருக்கும்.

நாங்கள் ஒப்பந்தம் செய்யும்போது அவர் 'சாய் அபயங்கர் 01'. இப்போது 73 படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். அவர் வீட்டிற்குச் சென்றால் அங்கே ஒரு ஹெலிகாப்டரே நிற்கிறது. அவர் ஒரு காட்-கிஃப்டட் இசையமைப்பாளர். அவரை இந்தப் படத்திற்குள் கொண்டு வந்தது எங்களது 'Master Stroke' ஆகக் கருதுகிறோம். பாடல் வெளியான 15 நிமிடங்களிலேயே மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கிவிடுவார். அவர் ஒரு திறமையான கலைஞன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மதுரை கருப்பசாமி கோவிலுக்கு வந்தபோதே, இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் தான் நடக்கும் என்று தயாரிப்பாளரிடம் கூறினேன். இந்தப் படம் தொடங்கியதில் இருந்து இப்போது வரை கருப்பசாமி என் கையைப் பிடித்து கூடவே பயணிப்பதாக உணர்கிறேன். அவர்தான் இப்போது எனது மிகப்பெரிய பலம் என ஆர்.ஜே.பாலாஜி கூறினார்.

59
சாய் அபயங்கர்
Image Credit : X

சாய் அபயங்கர்

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசியதாவது : வேற எந்த ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் ஒரு அறிமுக இசையமைப்பாளரைத் தேர்வு செய்யத் தயங்கியிருப்பார்கள். ஆனால் சூர்யா சார் என் மீது நம்பிக்கை வைத்து என்னை உள்ளே கொண்டு வந்தார். நான் படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டேன். படத்தின் பின்னணி இசை ரசிகர்களிடையே பெரிதாகப் பேசப்படும். நிச்சயமாக இந்தப் படம் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கப்போவது உறுதி. பாடல்களுக்குக் கிடைத்துள்ள வரவேற்பு என்னை நெகிழ வைக்கிறது. சூர்யா சாருக்கு ஏற்கனவே பல கல்ட் படங்கள் உள்ளன, இந்தப் படம் வந்தபோது உடனே சம்மதித்தேன். பாலாஜி அண்ணா உடனான முதல் சந்திப்பே மிகச் சிறப்பாக இருந்தது. RJB அண்ணாவைச் சந்திக்கச் சென்ற வழியில், 'சூர்யா 45' இசையமைப்பாளர் சாய் அபயங்கர் என ட்விட்டரில் பார்த்தேன். அந்த நிமிடம் எனக்கு சிலிர்த்துவிட்டது என கூறினார்.

69
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு
Image Credit : X

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

கருப்பு ஆடியோ வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசியதாவது : ​"இந்தப் படத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. RJB மிகச்சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். பாலஜியின் பணி ஒரு தயாரிப்பாளராக எனது சுமையைக் குறைத்து, வேலையை எளிதாக்கியது. GK விஷ்ணுவின் உழைப்பிற்கு நன்றி. தமிழில் ஒரு மிகப்பெரிய படமாக அமையும் என தெரிவித்தார்.

79
நடிகர் நட்டி
Image Credit : X

நடிகர் நட்டி

நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், "இந்தப் படத்தின் திரைக்கதை பிரமாதமாக வந்துள்ளது. இதற்காகப் பல ஒத்திகைகள் செய்தோம். நான் செய்த ஒவ்வொரு காட்சியையும் நினைவில் வைத்து RJB அதைச் செதுக்கியுள்ளார். சூர்யா சாரோட அழகு இன்னும் அப்படியே இருக்கு. அதனால்தான் அவருக்கு இத்தனை ரசிகர்கள்! அவரோட உழைப்பும் அர்ப்பணிப்பும் வேற லெவல் என பாராட்டினார்.

89
நடிகை சுவாசிகா
Image Credit : X

நடிகை சுவாசிகா

நடிகை சுவாசிகா பேசியதாவது : “ரெட்ரோ படத்திற்கு பிறகு சூர்யா சாருடன் நான் நடிக்கும் 2-வது படம் இது. 'லப்பர் பந்து' படத்திற்கு பிறகு என்னுடைய லுக்கை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன், அது இந்தப் படத்தில் உடனடியாக நடந்தது. ​என்னை அழைத்த RJB சாருக்கு மிகப்பெரிய நன்றிகள். கருப்பு ஒரு பிரம்மாண்டமான என்டர்டெய்னர், இதில் எனக்கு மிகச்சிறந்த கதாபாத்திரம் கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

99
நடிகை ஷிவதா
Image Credit : X

நடிகை ஷிவதா

நடிகை ஷிவதா பேசுகையில், ​"மதுரையில கருப்பு படப்பிடிப்பு நடந்தப்பவே ரொம்ப சந்தோஷமா இருந்தது, இப்போ இந்த மேடை இன்னும் மாஸா இருக்கு! RJB சார்னால தான் நான் இன்னைக்கு இந்த இடத்துல நிக்கிறேன், அவருக்கு பெரிய நன்றி. ​சூர்யா சார்கூட நடிச்ச அந்த நாளை என்னால மறக்கவே முடியாது, அன்னைக்கு என்னோட பிறந்தநாளும் கூட. அது ஒரு எமோஷனலான அழகான தருணம். RJB சார் ஒரு ஜாலியான நபர், டென்ஷனா இருக்குறப்போ கூட ரொம்ப ஸ்வீட்டா நடந்துப்பார். செட்ல அவரோட வேலையை அவரே ரொம்ப ரசிச்சு செய்வார் என கூறினார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா 45

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay Movie Ghilli: "ஓட்டேரி நரி" உருவான ரகசியம்.! கில்லி படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யங்கள்.!
Recommended image2
தேடி வந்த வாய்ப்பை மறுத்த மீனா.! சௌந்தர்யாவுக்கு அடித்த ஜாக்பாட்.! ரூ.100 கோடி வசூலித்த அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?
Recommended image3
உனக்கு சாப்பாடு கிடையாது வெளியே போக சொன்ன சிவாஜி - ரஜினி பட இயக்குனர் சொன்ன வார்த்தையால் வெடித்த பிரச்சனை!
Related Stories
Recommended image1
‘கருப்பு’க்கு முன் மே மாதத்தில் ரிலீஸ் ஆன சூர்யா படங்களும்... அதன் ரிசல்டும் ஒரு பார்வை
Recommended image2
ஏ.ஆர்.ரகுமான் விலகல் முதல் விஜயால் செய்த மாற்றம் வரை... ஆர்.ஜே.பாலாஜி உடைத்த கருப்பு பட சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved