- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Ethirneechal : ஜனனியை கொல்லத்துடிக்கும் இராவணன்... ஆதி குணசேகரனுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!
Ethirneechal : ஜனனியை கொல்லத்துடிக்கும் இராவணன்... ஆதி குணசேகரனுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!
Ethirneechal Thodargiradhu Serial 18 June 2026 Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியை கொன்றுவிட்டு, தர்ஷினியை மீட்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் இராவணன்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, தர்ஷினியை காப்பாற்றிவிட்ட நிலையிலும், அவர் மீது பொய் புகார் கொடுத்து அவரை போலீசில் சிக்க வைப்பதற்கான வேலைகளை செய்துள்ளார் இராவணன். இதனால் ஜனனியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஜனனிக்கு உதவி வந்த அருந்ததி, தன்னால் தான் ஜனனி ஆபத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்து, தான் தனியாக செல்வதாக கூறிவிட்டு அவரிடம் இருந்து பிரிந்து சென்றுவிட்டார். பின்னர் தர்ஷினியும் ஜனனியும் காரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஓய்வெடுக்கும் ஜனனி - தர்ஷினி
செல்லும் வழியில் சாலையோரம் அமர்ந்து தர்ஷினியும், ஜனனியும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க, அப்போது கால்வலி பரவாயில்லையா என கேட்கிறார் ஜனனி. இதுவே வீட்டுல இருந்து கால் சரியில்லேனா பெட்ல படுத்துட்டு முடியலன்னு சொல்லிருப்போம். ஆனா முடிஞ்சே ஆகணும்னு நம்மளே முயற்சி செய்யுறப்போ, முக்கால்வாசி சரியான மாதிரி இருக்கு சித்தி, என்னதா காலில் வலி இருந்தாலும் நாம கடந்து வந்துவிடுகிறோம். மனசு தான் சித்தி எல்லாத்துக்கும் காரணம் என தர்ஷினி சொல்ல, அதற்கு ஜனனியும் கரெக்ட் தான் என கூறுகிறார்.
பழைய கதையை பேசும் ஜனனி
தொடர்ந்து பேசும் ஜனனி, எல்லாத்துக்கும் மனசு தான் காரணம், ஆனா எல்லாத்துக்கும் ஒரே மாதிரியான மனசு இருக்காது. நாமளும் அதே மாதிரி தான், பிரச்சனை, அநியாயம் அதையெல்லாம் பார்த்தால் தட்டிக் கேட்கணும்னு சொல்ற மனசு. ஆனா இதெல்லாம் நமக்கெதுக்குனு ஒதுங்கிப் போறவங்களும் நிறைய பேர் இருக்காங்க. நாம தான் என்ன நடந்தாலும் சண்டை போட்டு தட்டிக் கேட்கிறோம். அதுக்கு நம்ம கொடுக்குற விலை தான் இந்த சூழல். எங்க அப்பா என்னை ரொம்ப ஸ்ட்ரிக்டா வளர்த்தார். என்னை எங்குமே தனியா விடாம வளர்த்தார். அப்போ தனிமையை கூட தனியா எதிர்கொள்ள முடியாமல் இருந்த நான், இப்போ தனியா காட்டுக்குள்ள வந்து நிக்குறேன் என கூறுகிறார்.
இராவணன் பற்றி ஜனனிக்கு வந்த டவுட்
தர்ஷினியிடம் இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்லும் ஜனனி, நம்ம இப்போ கண்ணுக்கு தெரிஞ்ச எதிரியா ஒருத்தரை பாக்குறோம். ஆனா, கண்ணுக்கு தெரியாத ஒரு எதிரி ஏதோ ஒன்னு வந்து நிக்குது. அது என்னால உணர முடியுது என கூறுகிறார் ஜனனி. அந்த கண்ணுக்கு தெரியாத எதிரி இராவணன் தான் என்பதை ஜனனி கண்டுபிடிப்பாரா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. மறுபுறம் சக்தி, இராவணை எதிர்த்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி, ஜனனி இருக்கும் இடத்தை தேடி அழைகிறார்.
வீட்டில் வெடித்த பிரச்சனை
அதேபோல் வீட்டில் கதிரும், இராவணனின் செயல்களுக்கு எதிராக இருக்கிறார். ஆனால் ஞானம், இராவணனை நம்புவது மட்டுமின்றி, நீ ஏண்டா தேவையில்லாம பிரச்சனை பண்ணுற என கதிரிடம் கேட்க, அதற்கு அவர், நான் பிரச்சனை பண்ணுவதாகவே இருக்கட்டும், அண்ணன் எங்க போயிருக்காரு என கேட்கிறார். அப்போது அங்கு இருந்த ஈஸ்வரியின் அப்பா, ஜனனி உயிரோடு வந்தாலும் சரி, இல்ல பிணமா வந்தாலும் சரி, இந்த வீட்டுக்குள்ள நுழையக் கூடாது என கூற, அவரை தடுத்து நிறுத்துகிறார் விசாலாட்சி. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

